மூன்று ரோமியோ வானூர்திகளை பெற உள்ள இந்திய கடற்படை

இந்த வருடம் இந்திய கடற்படை மூன்று ரோமியோ வானூர்திகளை பெற உள்ளது.இந்தியா தனது கடற்படைக்காக அமெரிக்காவிடம் இருந்து 24 MH-60 “Romeo” பலபணி ரோமியோ வானூர்திகளை ஆர்டர் செய்துள்ளது.

ஹெல் ஃபயர் ஏவுகணைகள், MK-54 டோர்பிடோக்கள் ,ராக்கெட்டுகள் , அதிநவீன ரேடார்கள் மற்றும் இரவில் பார்க்கும் கருவிகள் என அதிநவீன ஆயுதங்கள் மற்றும் அதிநவீன ஏவியோனிக்ஸ்களை இந்த ரோமியோ வானூர்திகள் பெற்றுள்ளன.

கடந்த வருடம் பிப்ரவரி மாதம் சுமார் 15157 கோடிகள் செலவில் 24 வானூர்திகள் அமெரிக்காவிடம் இருந்து ஆர்டர் செய்யப்பட்டது.எதிரி நீர்மூழ்கிகளை கண்டறிந்து அழிக்க இந்த வானூர்திகள் இந்திய கடற்படைக்கு உறுதுணையாக இருக்கும்.

தற்போது இந்திய கடற்படை போர்க்கப்பல்கள் பழைய வானூர்திகளை நம்பி தான் கடலில் பயணிக்கின்றன.இந்திய பெருங்கடலில் சீன நீர்மூழ்கிகளின் நடமாட்டம் அதிகரித்து வரும் வேளையில் ரோமியோ வானூர்திகளின் வரவு இந்திய கடற்படைக்கு புது தெம்பூட்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.