மலைப்பகுதிகளில் பயன்படுத்தி கொள்ள ரஷ்யாவின் ஸ்ப்ருட் எஸ்.டி.எம்-01 ரக இலகுரக டாங்கிகளை வாங்க இந்தியா விரைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த 18 டன்கள் எடை கொண்ட இலகுரக டாங்கியால் டி90 பயன்படுத்தும் அதே குண்டுகளை பயன்படுத்தி கொள்ள முடியும் மேலும் 500 கிமீ தொலைவுக்கு இயங்க முடியும்.
இந்த வகை டாங்கிகளை பராமரிப்பது எளிது எனவும் பல்வேறு அதிநவீன தொழில்நுட்ப வசதிகள், நவீன என்ஜின்கள் ஆகியவற்றை கொண்டுள்ளதாகவும் ரஷ்ய தரப்பு கூறுகிறது.
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த வருடம் ரஷ்யா சென்ற போது இந்த டாங்கிகளை விற்க முன்வந்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.