சீனா போர்க்கப்பல் நடமாட்டம் எதிரொலி ; நிகோபார் விமான தளத்தை நவீனப்படுத்தும் இந்தியா

  • Tamil Defense
  • June 10, 2021
  • Comments Off on சீனா போர்க்கப்பல் நடமாட்டம் எதிரொலி ; நிகோபார் விமான தளத்தை நவீனப்படுத்தும் இந்தியா

மலாக்கா நீரிணையில் நமது கண்காணிப்பை பலப்படுத்தும் பொருட்டு நிகோபாரில் உள்ள ஐஎன்எஸ் பாஷ் விமான தளத்தில் உள்ள ஓடுபாதையை நவீனப்படுத்தும் பணியை இந்தியா மேற்கொண்டுள்ளது.

கிரேட் நிகோபார் தீவின் கேம்பல் விரிகுடாவில் 3500 அடி நீள ஓடுதளத்துடன் ஐஎன்எஸ் பாஸ் தளம் அமைந்துள்ளது.மலாக்கா நீரிணை பகுதியில் இந்திய விமானப்படை கண்காணிப்பை மேற்கொள்ள இந்த தளம் நமக்கு உதவிகரமாக இருக்கும்.

கடந்த 2012ம் ஆண்டு முன்னாள் விமானப்படை தளபதி அட்மிரல் நிர்மல் வெர்மா இந்த தளத்தில் செயல்பாட்டை தொடங்கி வைத்தார்.இந்தியாவின் தூர தெற்கில் உள்ள தளம் இதுவாகும்.

இதை நவீனப்படுத்துவதின் மூலம் இந்தியா மலாக்கா நீரிணை பகுதியில் தனது கண்காணிப்பை வலுப்படுத்த முடியும்.சீனாவிற்கு தேவையான 80 சதவீத எரிபொருள் இந்த நீரிணை வழியாக தான் செல்கிறது.

அந்தமான தலைநகர் போர்ட் பிளேரில் இருந்து 556கிமீ தொலைவில் இணைந்துள்ளது இந்த பாஸ் தளம்.தற்போது ஓடுதளத்தின் நீளம் 4300 அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அடுத்த வருடத்தில் ஓடுபாதையின் நீளத்தை 6000 அடியாகவும் அதன் பின்பு அடுத்தடுத்த ஆண்டுகளில் 10000 அடியாகவும் நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது.