கோர்பெட்- இந்தியா தாய்லாந்து கடற்படைகள் ஒருங்கிணைந்த ரோந்து

  • Tamil Defense
  • June 11, 2021
  • Comments Off on கோர்பெட்- இந்தியா தாய்லாந்து கடற்படைகள் ஒருங்கிணைந்த ரோந்து

இந்தியா மற்றும் தாய்லாந்து கடற்படைகள் இணைந்து ஒருங்கிணைந்த ரோந்து பயிற்சியை தொடங்கியுள்ளன.கோர்பெட் எனப்படும் இந்த பயிற்சியில் 31வது முறையாக இரு நாட்டு கடற்படைகளும் இணைந்துள்ளன.09 ஜீன் அன்று தொடங்கிய பயிற்சி 11 ஜீன் வரை நடைபெறும்.

இந்த கோர்பெட் பயிற்சியில் இந்திய கடற்படை சார்பில் ஐஎன்எஸ் சார்யு ரோந்து போர்க்கப்பலும் ,டோர்னியர் விமானமும் , தாய்லாந்து சார்பில் க்ரபி என்ற ரோந்து கப்பலும் கலந்து கொண்டுள்ளன.

2005 முதல் வருடத்திற்கு இரு முறை இந்த பயிற்சியை இரு நாட்டு கடற்படைகளும் மேற்கொள்கின்றன.இரு நாடுகளுக்கு இடையே உள்ள ஒருங்கிணைப்பு தன்மை மற்றும் புரிதலை அதிகரிக்கும் பொருட்டு இந்த பயிற்சியை இரு நாடுகளும் தொடர்ந்து நடத்தி வருகின்றன.