போர் அபாய எதிரொலி ;போர்கால அடிப்படையில் சீன எல்லையில் கட்டமைப்புகள் ஏற்படுத்தும் இந்தியா

  • Tamil Defense
  • June 18, 2021
  • Comments Off on போர் அபாய எதிரொலி ;போர்கால அடிப்படையில் சீன எல்லையில் கட்டமைப்புகள் ஏற்படுத்தும் இந்தியா

அபாயகரமாக பகுதிகள் மற்றும் கொடூரமான கால நிலை என்பதை கடந்து சாலைகள் ,பாலங்கள் மற்றும் சுரங்க பாதைகள் என வீரர்களை வேகமாக எல்லைக்கு அனுப்ப தேவையான கட்டமைப்புகளை போர்கால அடிப்படையில் கடந்த ஒரு வருடமாக இந்தியா சீன எல்லையில் ஏற்படுத்தி வருகிறது.

கிழக்கு லடாக் பகுதியில் இன்னும் இந்திய சீன இராணுவங்களின் மோதல் தொடர்ந்து தான் வருகிறது.எல்லைக் கட்டமைப்பை பொருத்த வரை சீனாவை விட இந்தியா பின்தங்கி தான் உள்ளது என்பது அபாயகரமான உண்மை.லடாக் பகுதியில் உள்ள ஆபத்தை உணர்ந்து இன்னும் 50 முதல் 60 ஆயிரம் வீரர்கள் மேலதிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.இந்திய இராணுவத்தின் மொத்த வீரர்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டு பார்த்தால் கணிசமாக வீரர்களை ஒரே பகுதியில் இந்திய இராணுவம் குவித்துள்ளதை கொண்டு பிரச்சனையில் தீவிரத்தை நம்மால் உணர முடிகிறது.

கடந்த வியாழன் அன்று தான் அருணாச்சல்,லடாக் மற்றும் காஷ்மீர் பகுதிகளில் எல்லைச் சாலைகள் அமைப்பால் கட்டப்பட்ட 12 சாலைகளை பாதுகாப்பு துறை அமைச்சர் திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியா அமைதியையே விரும்புகிறது எனினும் எதிரிகளுக்கு தகுந்த பதிலடி வழங்கவும் தயங்காது என பாதுகாப்பு துறை அமைச்சர் அஸ்ஸாமில் நடைபெற்ற ஒரு விழாவில் பேசியுள்ளார்.

தெஸ்பங்கில் இந்திய வீரர்கள் ரோந்து செல்லும் பகுதிகளை சீனப்படைகள் தடுத்துள்ளனர்.கோக்ரா,ஹாட் ஸ்பிரிங் மற்றும் தெம்சோக் பகுதியில் படைவிலக்கம் நடைபெறவே இல்லை.