மூன்றே வருடங்களில் மிக்-21 படையில் இருந்து நீக்கம்- தளபதி பதாரியா

  • Tamil Defense
  • June 22, 2021
  • Comments Off on மூன்றே வருடங்களில் மிக்-21 படையில் இருந்து நீக்கம்- தளபதி பதாரியா

மிக்-21 பல ஆண்டுகாலமாக இந்திய விமானப்படையில் செயல்பட்டு வருகிறது.பல விமானங்கள் நவீனப்படுத்தப்பட்டு விமானப்படையில் செயல்பாட்டில் உள்ளது.இந்த மிக்-21 விமானங்களை படையில் இருந்து படிப்படியாக குறைத்து புதிய விமானங்கள் படையில் இணைக்க பல்வேறு முயற்சி எடுக்கப்பட்டு வருகின்றன.

தற்போது நடந்து முடிந்த ஒருங்கிணைந்த பட்டமளிப்பு விழாவில் பேசிய விமானப்படை தளபதி மிக்-21 விமானங்களை உடனடியாக படையில் இருந்து விடுவிக்க முடியாது.அடுத்த 2-3 வருடங்களில் அதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

தற்போது 36 ரபேல் விமானங்களை படையில் இணைக்க விமானப்படை முழு முயற்சியில் உள்ளது.ரபேல் விமானங்கள் அனைத்தும் படையில் இணைந்த பிறகு விமானப்படை தனது கவனத்தை தேஜஸ் பக்கம் திருப்ப உள்ளது.அடுத்த மூன்று வருடங்களுக்கு தேஜஸ் படையில் இணைக்கப்படும்.

தற்போது மிக்-21 பழயை விமானங்கள் ஆகிவிட்டன.இதை ” பறக்கும் சவப்பெட்டி ” என்று தான் பலரும் அழைக்கின்றனர்.

ஆனால் இதே மிக்-21 விமானம் தான் பாக்கின் எப்-16 விமானத்தையும் வீழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கதே..