அதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்களை உருவாக்க முடிவு !!

  • Tamil Defense
  • June 11, 2021
  • Comments Off on அதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்களை உருவாக்க முடிவு !!

பூனேவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமி இந்திய ராணுவத்தின் முப்படைகளுக்குமான அதிகாரிகளை பயிற்றுவிக்கிறது என்பது பலருக்கு தெரிந்து இருக்கும்.

இந்த பயிற்சி மையத்தில் 18 ஸ்க்வாட்ரன்கள் உள்ளன, ஒவ்வொரு ஸ்க்வாட்ரனிலும் தலா 120 வீரர்கள் வீதம் மொத்தமாக தற்போது 2020 வெளிநாட்டு மற்றும் இந்திய பயிற்சி அதிகாரிகள் உள்ளனர்.

இந்த நிலையில் பாதுகாப்பு அமைச்சகம் முப்படைகளில் நிலவும் அதிகாரிகள் பற்றாகாகுறையை போக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்களை உருவாக்க முடிவு செய்துள்ளது.

இதன்படி சுமார் 400 மேலதிக இடங்கள் உருவாக்கப்படும் ஆக மொத்தமாக 2400க்கும் அதிகமான இந்திய மற்றும் வெளிநாட்டு அதிகாரிகள் பயிற்சி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய பாதுகாப்பு அகாடமியில் மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற வேண்டும், இந்த வருடத்திற்கு இரண்டு பருவம் வீதமாக 6 பருவங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் இரண்டு அதாவது 6 மாதத்திற்கு ஒரு பிரிவு பயிற்சி அதிகாரிகள் பயிற்சி நிறைவு செய்து தாங்கள் தேர்வு செய்த படையின் பயிற்சி கல்லூரிகளுக்கு செல்கின்றனர்.

மேலும் தற்போது ஒரு பிரிவுக்கு 20 வெளிநாட்டு பயிற்சி அதிகாரிகள் அனுமதிக்கப்படுகின்றனர் இதனையும் 50 ஆக உயர்த்த தீர்மானிக்கப்பட்டு உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.