மத்திய அரசு சனிக்கிழமை எடுத்த முடிவின்படி சுமார் 25 ஆண்டுகள் அல்லது அதற்கு முன்புவரை நடைபெற்ற ராணுவ நடவடிக்கைகளை பொதுவெளியில் வெளியிட திட்டமிட்டு உள்ளது.
இதற்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அனுமதி அளித்த நிலையில் இதற்காக பாதுகாப்பு அமைச்சக இணை செயலாளர் தலைமையில் முப்படை அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த திட்டம் கே. சுப்ரமணியம் தலைமையிலான 1999 கார்கில் போர் ஆய்வு கமிட்டியாலும், என். என். வோரா கமிட்டியாலும் அப்போது மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டதாகும்.
எது எப்படியோ 1962 போர், ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் , கார்கில் போரில் நடைபெற்ற முக்கிய நடவடிக்கைகள் தொடர்ந்து ரகசியமாக காக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒரு பிரிவான வரலாற்று பிரிவு இத்தகைய பணிகளை ஒருங்கிணைத்து தேவையான தகவல்களை மட்டுமே தேர்ந்தெடுத்து அனுமதி வாங்கி பிரசுரித்து வெளியிடும் பணிக்கு பொறுப்பானது என்பது கூடுதல் தகவல் ஆகும்.