
கடந்த வருடம் இந்தியா மற்றும் சீனா இடையே எல்லையோரம் ஏற்பட்ட மோதலுக்கு பிறகு தனது இருப்பை வலுப்படுத்த பல்வேறுபட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் லடாக்கில் உள்ள பாங்காங் ஸோ ஏரியில் வீரர்கள் பயன்படுத்தி கொள்ளும் வகையிலான அதிவேக போக்குவரத்துபடகுகளை வாங்க இந்திய ராணுவம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
இத்தகைய 17 படகுகளை கோவாவில் இயங்கும் அக்வேரியஸ் ஷிப்யார்டஸ் லிமிடெட் நிறுவனம் கட்டி தரும் எனவும் இதை போன்ற படகுகள் ஏற்கனவே கடற்படையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இத்தகைய படகுகளில் குழுவினர் தவிர்த்து 22 வீரர்கள் வரை பயணிக்க முடியும் எனவும் 35 அடி நீளம் கொண்ட இவை மணிக்கு 37 கிமீ வேகம் வரை செல்லும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஃபைபர் க்ளாஸால் கட்டமைக்கப்பட்ட இந்த வகை படகுகள் மூலமாக விரைவாக ஏரியின் குறுக்கே வீரர்களை நகர்த்த முடியும் தற்போது வரை வீரர்கள் ஏரியியை சுற்றி கரடு முரடான பகுதிகளில் நடந்து செல்ல வேண்டிய நிலை இருக்கிறது.
கடந்த ஜனவரி மாதம் இந்திய ராணுவம் 12 அதிவேக ரோந்து படகுகளை கோவா கப்பல் கட்டுமான தளத்திடம் கட்டி தர ஒப்பந்தம் செய்து கொண்டது கடந்த மாதம் முதல் இவற்றின் டெலிவரி தொடங்கி உள்ளது.
பாங்காங் ஸோ பகுதியில் பல்வேறு கட்ட ராணுவ மற்றும் ராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு சீனா பின்வாங்கினாலும் கோக்ரா மற்றும் ஹாட் ஸ்ப்ரீங்ஸ் பகுதிகளில் இன்னும் வெளியேற தாமதித்து வருவது. குறிப்பிடத்தக்கது.