சீனாவிற்கு எதிராக இந்திய இராணுவத்திற்கு தேவையான மிக முக்கியமான ஆயுதம்

  • Tamil Defense
  • June 24, 2021
  • Comments Off on சீனாவிற்கு எதிராக இந்திய இராணுவத்திற்கு தேவையான மிக முக்கியமான ஆயுதம்

1750 எதிர்கால தரைப்படை கவச வாகனம் ,350 இலகுரக டேங்குகள் வாங்குவது தரைப்படையின் அடுத்த திட்டமாக உள்ளது.இதற்காக மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்த 1750 இன்பான்ட்ரி காம்பாட் வாகனங்களை பெற Request for information-ஐ இந்திய இராணுவம் வெளியிட்டுள்ளது.

இந்த கவச வாகனங்களை கிழக்கு லடாக் , பாலைவனப் பகுதி மற்றும் நீர்நில பகுதிகளில் களமிறக்க இந்திய இராணுவம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லடாக் பகுதியில் தற்போது இராணுவம் பெற்றுள்ள படிப்பினைகள் மூலம் சீனாவுக்கு எதிராக 350 இலகுரக டேங்குகளை பெற இந்திய இராணுவம் முயற்சித்து வருகிறது.இந்த இலகுரக டேங்குகளும் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் பெறப்பட உள்ளது.

உயர்மலை பகுதிகளில் செயல்படும் வண்ணம் இந்த டேங்குகளின் எடை 25டன்களுக்கு குறைவானதாக இருத்தல் வேண்டும் என இராணுவம் கூறியுள்ளது.