பேச்சுவார்த்தை மூலம் லடாக் பிரச்சனையை முடிக்க இந்தியா சீனா முடிவு

  • Tamil Defense
  • June 27, 2021
  • Comments Off on பேச்சுவார்த்தை மூலம் லடாக் பிரச்சனையை முடிக்க இந்தியா சீனா முடிவு

கிழக்கு லடாக் உட்பட அனைத்து மோதல் இடங்களிலும் உள்ள பிரச்சனையை பேச்சுவார்த்தை மற்றும் தொலைத் தொடர்ப்பு உதவியுடன் சுமூகமாக முடிக்க இந்தியா மற்றும் சீனா ஒப்புக்கொண்டுள்ளன.

பிரச்சனை குறித்து மீண்டும் ஒருமுறை சந்தித்து பேச இரு நாடுகளும் முன்வந்துள்ளன.இந்திய சீனா மோதல் கடந்த வருடம் மே மாதம் தொடங்கி கல்வான் மோதலுக்கு பிறகு பிரச்சனை மிகத் தீவிரமானது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த மோதலை விரைவில் முடிக்க இருநாடுகளும் 12ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு மிக விரைவாக தயாராக உள்ளன.விரைவில் இந்த பிரச்சனையை முடிக்க இரு நாடுகளும் உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.