இந்தியாவின் மிக சக்திவாய்ந்த ட்ரோன் ரஸ்டம்-2; HALக்கு வாய்ப்பு வழங்கப்படுமா ??

  • Tamil Defense
  • June 22, 2021
  • Comments Off on இந்தியாவின் மிக சக்திவாய்ந்த ட்ரோன் ரஸ்டம்-2; HALக்கு வாய்ப்பு வழங்கப்படுமா ??

இந்தியாவின் நீண்ட நாள் கனவு திட்டங்களில் ஒன்று அமெரிக்காவை போல மிகவும் சக்திவாய்ந்த அதிநவீன ட்ரோன்களை சொந்தமாக தயாரிக்க வேண்டும் என்பதாகும்.

அந்த வகையில் ரஸ்டம்-2 அல்லது தபாஸ் – BH201 எனும் அதிநவீன “ஆளில்லா ஆயுதம் தாங்கிய தொலைதூர ட்ரோன்” (UCAV) தயாரிப்பதாகும்.

இந்த ட்ரோனுடைய தயாரிப்பு உரிமையை பெற மூன்று தனியார் மற்றும் நான்கு பொதுத்துறை நிறுவனங்கள் போட்டி போடுகின்றன, அவையாவன டாடா பவர், லார்சன் & டுப்ரோ, கோத்ரேஜ் ஏரோஸ்பேஸ், பெல், HAL போன்றவை ஆகும்.

சமீபத்தில் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் வெளியிட்ட புதிய திட்ட பட்டியலில் ரஸ்டம்-2 இடம்பெற்றுள்ளது இது HAL மற்றும் பெல் ஆகிய நிறுவனங்கள் இந்த ஒப்பந்தத்தை பெற்றுள்ளதா எனும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஸ்டம்-2 ட்ரோனுடைய உருவாக்கம் மற்றும் மேம்பாட்டு பணிகளில் பல்வேறு பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து செயல்பட்டது மிகவும் குறிப்பிடத்தக்க விஷயமாகும்.