BREAKING 22 வருட காத்திருப்புக்கு பின் 6 நீர்மூழ்கி கப்பல்கள் கட்ட அனுமதி !!

  • Tamil Defense
  • June 4, 2021
  • Comments Off on BREAKING 22 வருட காத்திருப்புக்கு பின் 6 நீர்மூழ்கி கப்பல்கள் கட்ட அனுமதி !!

இன்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் 22 வருடங்கள் காத்திருப்பில் இருந்த திட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளது.

அதன்படி ப்ராஜெக்ட்-75ஐ திட்டத்தின்கீழ் 6 புதிய டீசல் எலெக்ட்ரிக் நீர்மூழ்கி கப்பல்கள் இந்தியாவிலேயே தொழில்நுட்ப பரிமாற்ற அடிப்படையில் கட்டப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

SMX OCEAN 3.0

இந்த திட்டத்தின் ஒட்டுமொத்த மதிப்பு சுமார் 43,000 கோடி ரூபாய் ஆகும் இதனை பெற மஸகான் கப்பல் கட்டுமான தளம் மற்றும் லார்சன் அன்ட் டுப்ரோ நிறுவனம் ஆகியவை போட்டி போடுகின்றன.

இந்த ப்ராஜெக்ட்-75ஐ திட்டத்திற்கு அனேகமாக ஃபிரான்ஸ் நாட்டின் நேவல் குழுமத்தின் SMX 3.0 ரக நீர்மூழ்கி தேர்வாகும் என தெரிகிறது, இதே நிறுவனம் தான் ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கிகளை வடிவமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.