பாகிஸ்தான் அணு ஆயுத நாடான முழு வரலாறு இந்தியா தூண்டுகோலாக அமைந்த கதையை தவறாமல் படியுங்கள் !!
1 min read

பாகிஸ்தான் அணு ஆயுத நாடான முழு வரலாறு இந்தியா தூண்டுகோலாக அமைந்த கதையை தவறாமல் படியுங்கள் !!

சுமார் 47 ஆண்டுகளுக்கு முன்னர் புத்தஜெயந்தி அன்று ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் ஸ்மைலிங் புத்தா என்ற பெயரில் இந்தியா அணு ஆயுத சோதனையை நடத்தியது, மேற்குலகத்தின் கண்களில் மண்ணை தூவி விட்டு நடைபெற்ற இந்த சோதனை மூலமாக ஐ.நா பாதுகாப்பு சபையில் உறுப்பினரல்லாத முதல் அணு ஆயுத நாடாக இந்தியா பெயர் பெற்றது.

இந்த செய்தியை பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் நெதர்லாந்து நாட்டின் அல்மேலோ பகுதியில் அமைந்துள்ள யூரேனிய செறிவூட்டல் மையத்தில் பணகபுரிந்து வந்த பொறியாளர் ஒருவரை கடுமையாக பாதித்தது அவர் தான் பாகிஸ்தான் அணு ஆயுத திட்டத்தின் தந்தை என அழைக்கப்படும் அப்துல் காதீர் கான் ஆவார்.

பிரிட்டிஷ் இந்தியாவின் போபால் நகரில் பிறந்து வளர்ந்த அவர் சுதந்திரத்தின் போது பாகிஸ்தானுக்கு சென்று குடியேறினார் பின்னர் கராச்சி பல்கலைகழகம், நெதர்லாந்தின் டெல்ஃபட் பல்கலைகழகம் மற்றும் பெல்ஜியத்தில் உள்ள கத்தோலிக்க பல்கலைகழங்களில் உயர்கல்வியை பயின்று நெதர்லாந்தில் பணியாற்றி வந்த அவர் இந்த செய்தியின் தாக்கத்தை அடுத்த பாகிஸ்தானை அணு ஆயுத நாடாக மாற்ற சூளுரைத்தார்.

இதனையடுத்து அன்றைய பாகிஸ்தான் பிரதமர் திரு. ஸூல்ஃபிகர் அலி பூட்டோவுக்கு கடிதம் எழுதினார், அதற்கு பிறகு கானை சந்தித்த பூட்டோ அவரின் திட்டங்களை கேட்டு பிரிமிப்படைந்து அனைத்து வகையான அனுமதிகளையும் உடனே வழங்க பணிகளும் துவங்கின.

சட்டவிரோதமாக அணுசக்தி தொழில்நுட்பங்களை பாகிஸ்தானுக்குள் கொண்டு வருவதற்கான பணிகள் துவங்கின , 1980கள் வரை பணிபரிவர்த்தனைகள் சார்ந்த கடுமையாற சட்டவிதிகள் அமலில் இல்லை, இதனை பாகிஸ்தான் தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டது, பினாமி கம்பெனிகள் மூலமாக ஒரு கருப்பு சந்தை உருவாக்கப்பட்டது.

மேலும் அணு ஆயுதம் தயாரிப்பதற்கு தேவையான கருவிகள் ஏற்றுமதி கட்டுபாட்டு பட்டியலில் இருந்தன, வடிவமைப்பு ஃபார்முலா போன்றவை அந்தந்த நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளின் தீவிர கண்காணிப்பில் இருக்கும் ஆகவே இவற்றை பெறுவதற்கு மிகப்பெரிய அளவில் பாகிஸ்தானுக்கு பணம் மற்றும் இன்னபிற உதவிகள் தேவைப்பட்டது.

அப்போது இஸ்ரேலுடனான போரில் தோற்று துவண்டு ஆத்திரத்தில் இருந்த அரபு நாடுகள் பண உதவி செய்ய முன்வந்தன, ஸூல்ஃபிகர் பணம் கேட்ட போதெல்லாம் பணத்தை அரபு நாடுகள் வாரி இறைத்தன.

பின்னர் கான் சிம்பிளாக தான் பணியாற்றி வந்த இடத்தில் இருந்து ரகசியங்களை திருடி நெதர்லாந்தின் கே.எல்.எம் விமான நிறுவனத்தில் பணிபுரிந்த தனது சகோதரர் குதூஸிடம் ஒப்படைக்க அவர் பெல்ஜியத்தில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் அவற்றை ஒப்படைத்தார், பொதுவாக தூதரக பொருட்கள் ராஜாங்க பாதுகாப்பு காரணமாக சோதனையிடப்படாது.

இந்த ராஜாங்க பாதுகாப்பை பெல்ஜியத்தில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் பயன்படுத்தி கொண்டு ரகசிய ஆவணங்களை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்க அவை பாகிஸ்தானுடை அணு ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள சக்காலாவை பத்திரமாக சென்று சேர்ந்தன.

அதை போல அரபு நாடுகள் வாரி இறைக்கும் பணத்தை எல்லாம் ஆகா கான் எனும் பாகிஸ்தானியர் க்ரெடிட் மற்றும் காமர்ஸ் இன்டர்நேஷனல் என்ற பெயரில் போலி வங்கி ஒன்றை துவங்கி பினாமி கணக்குகள் வழியாக தேவையான இடத்திற்கு பண பரிவர்த்தனை செய்து உதவினார்.

நாளாக நாளாக நெதர்லாந்து உளவுத்துறையினருக்கு கான் மீது சந்தேகம் வந்தது, அதுவும் ஒருமுறை கான் தனது சக்திக்கு மீறிய சில ரகசியங்கள் பற்றி விசாரிக்க சந்தேகம் வலுத்த நிலையில் அவரது நிறுவனம் அவருக்கு வேறு பணியை கொடுத்தது,

கான் மீது நெதர்லாந்து காவல்துறை கண்காணிப்பை வலுப்படுத்தி கைது செய்யவிருந்த நிலையில் அதனை எப்படியோ அறிந்து கொண்ட கான் உடனடியாக பாகிஸ்தானுக்கே தப்பி சென்றார், ஆனால் வெறுங்கையுடன் திரும்பாமல் மிக முக்கியமான ஆவணங்களை திருடி சென்றிருந்தார்.

ஆனால் இவை மட்டுமே பாகிஸ்தானுக்கு அணு ஆயுதம் உருவாக்க போதவில்லை காரணம் அன்றைய காலகட்டத்தில் பாகிஸ்தான் சிறு குண்டுசியை கூட இறக்குமதி செய்து கொண்டு இருந்தது, இதனையடுத்து ஐரோப்பிய சப்ளையர்கள் மூலமாக செறிவூட்டல் கருவிகளை பாகிஸ்தான் இறக்குமதி செய்தது.

பின்னர் பாகிஸ்தானுடைய திட்டங்கள் பற்றிய கசிவுகள் ஐரோப்பாவில் பரவ முக்கிய அணு ஆராய்ச்சி கருவிகள் ஏற்றுமதி தடை பட்டியலில் சேர்க்கப்பட கான் மீண்டும் யோசனை செய்து இம்முறை இரண்டாம் தரம் கொண்ட பொருட்களை தனித்தனியாக இறக்குமதி செய்து அவற்றை பாகிஸ்தானில் வைத்து அசம்பிளிங் செய்யுமாறு வழிகாட்டி உதவினார்.

இதற்கிடையே 1976ஆம் ஆண்டு பாகிஸ்தானின் ககுதா நகரில் ஏற்கனவே இருந்த சிறிய மையத்தை கான் “கான் ஆராய்ச்சி மையம்” என்ற பெயரில் முழு அளவிலான அணு ஆராய்ச்சி மையமாக தோற்றுவித்து பணிகளை முடுக்கி விட்டார்.

பல வகைகளில் தடங்கல்கள் ஏற்பட உலகம் முழுக்க இருக்கும் பாகிஸ்தான் தூதரகங்கள் பாகிஸ்தான் தொழிலதிபர்களின் தொழில்களை பயன்படுத்தி அணு ஆராய்ச்சிக்கான கருவிகள் முதல் மூலப்பொருளான மஞ்சள் கேக் (யூரேனியம்) வரை தனித்தனியாக இறக்குமதி செய்ய வைத்தன.

அதை போல பாகிஸ்தான் மீது சந்தேகம் வலுக்காமல் இருக்கு பல இஸ்லாமிய நாடுகள் கருவிகளை தாங்களே இறக்குமதி செய்து உதவின, அதை போலவே மூலப்பொருளான மஞ்சள் கேக்கினை பாகிஸ்தான் பெற்ற கதையும் மிகவும் சுவாரஸ்யமான ஒன்றாகும்.

அக்காலத்தில் ஜெர்மனி தான் அதனை மிகப்பெரிய அளவில் ஏற்றுமதி செய்து வந்த நாடு ஆனால் பாகிஸ்தான் மீதான சந்தேகம் காரணமாக அதனை பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்ய தடை விதித்திருந்த நிலையில் நைஜர் நாட்டில் சஹாரா பாலைவனத்தில் மிகப்பெரிய அளவில் யூரேனிய கனிமங்கள் இருப்பதை பாகிஸ்தான் மோப்பம் பிடித்தது.

அப்போது தான் லிபியாவின் அதிபராக இருந்த கர்னல் கடாஃபி பாகிஸ்தானுடைய உதவிக்கு வந்தார், நைஜர் நாட்டில் அதிகாரத்திற்கு இரண்டு குழுக்கள் சண்டையிட்டு வர அதில் ஒரு சாராருக்கு கடாஃபி ஆட்சி அமைக்க உதவினார் பின்னர் இந்த செல்வாக்கை பயன்படுத்தி யூரேனிய கனிமத்தை பாகிஸ்தான் பெற்று கொள்ள உதவினார்.

இப்படி படிப்படியாக பாகிஸ்தான் முன்னேறினாலும் மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற முடியவில்லை பின்னர் ஒருவழியாக 1998ஆம் ஆண்டு இந்தியா அணு ஆயுத சோதனை நடத்தியதற்கு பின்னர் தொடர்ந்து 5 அணு குண்டுகளை வெடித்து தன்னை அணு ஆயுத நாடாக உலக அரங்கில் நிலைநிறுத்திக் கொண்டது.

இதில் மிக முக்கியமான விஷயம் கான் உருவாக்கிய அணுசக்தி கள்ளசந்தை ஆகும் தென் ஆப்பிரிக்கா பாகிஸ்தான் துபாய் இங்கிலாந்து வடகொரியா மலேசியா சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் இந்த சந்தையின் அமைப்புகள் இருந்தன மிக எளிதாக அணுசக்தி சார்நாத பொருட்களை இங்கு பெற்றுக்கொள்ள முடியும், ஒர் முன்னாள் மலேசிய பிரதமரின் மகன் வரை இதில் தொடர்பு கொண்டிருந்ததும்,

பின்னாட்களில் கான் வடகொரியா, லிபியா மற்றும் ஈரானுக்கு அணு ஆயுத ஆராய்ச்சி சாரந்த கருவிகள் கிடைக்க இந்த நெட்வொர்கக்கை பயன்படுத்தி உதவினார் இன்று வடகொரியா அணு ஆயுத நாடாக இருப்பதற்கும் அவரே காரணமாவார் இந்த விஷயங்களை அவரே தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஒப்புக்கொள்ள,

உலக அரங்கிலும் பாகிஸ்தானிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது, இதனையடுத்து அவர் பகிரங்கமாக மன்னிப்பு கோரிய நிலையில் அன்றைய பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷரஃப் அவருக்கு மன்னிப்பு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படியான சேவையை வழங்கிய காரணத்தால் பாகிஸ்தான் அரசு அவருக்கு இரண்டு உயரிய விருதுகளை மூன்று முறை வழங்கி கவுரவித்தது அதில் நிஷான்-ஈ-இம்தியாஸ் எனும் விருதை இரண்டு முறை பெற்ற ஒரே பாகிஸ்தானியரும் கான் ஆவார்.