
ஒரு ப்ரிகேடியர், ஒரு கர்னல், 1 லெஃப்டினன்ட் கர்னல், 1 கேப்டன் மற்றும் 1 JCO ஆகிய ஐந்து அதிகாரிகள் மீது கோர்ட் மார்ஷியல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
அதன்படி இவர்கள் ஐவரும் போலி ஆவணங்கள் தயாரித்து 6லட்ச ரூபாய் பண பரிவர்த்தனை மோசடி மூலமாக சுருட்டியதாக குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.
ப்ரிகேடியர் குப்தா, கர்னல் சுபாஷ் சந்திரா, லெஃப்டினன்ட் கர்னல் சுதீர் குமார் சிங், கேப்டன் ககன் பாவா, வாரன்ட் ஆஃபீஸர் ராஜேந்திரன் ஆகியோர் தான் இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் ஆவார்.
இவர்கள் தவிர நாயப் சுபேதார் சுரேஷ் ராஜ்புட் என்பவரும் கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளார் அனேகமாக இவர் மீதும் ராணுவம் கோர்ட் மார்ஷியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராணுவ தரப்பு சார்பில் மேற்குறிப்பட்டோரின் செயல்பாடுகள் ராணுவ விதி 180ஐ மீறியதாக உள்ளது என பாதுகாப்பு அமைச்சகம் மூலமாக அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.