இலகுரக டேங்குகளை இந்திய இராணுவத்திற்கு வழங்க விரும்பும் இந்திய நிறுவனங்கள்

  • Tamil Defense
  • June 17, 2021
  • Comments Off on இலகுரக டேங்குகளை இந்திய இராணுவத்திற்கு வழங்க விரும்பும் இந்திய நிறுவனங்கள்

25 டன்கள் மட்டுமே எடையுடை இலகுரக டேங்குகள் 350 வாங்க இந்திய இராணுவம் தற்போது முடிவெடுத்துள்ளது.இந்திய இராணுவத்திற்கு இந்த டேங்குகளை அளிக்க விரும்பும் நிறுவனங்கள் பதில் அளிக்கலாம் என இந்திய இராணுவம் கூறியுள்ள வேளையில் இந்த இலகுரக டேங்குகளை இந்திய இராணுவத்திற்கு அளிக்க ஐந்து இந்திய நிறுவனங்கள் தயாராக உள்ளன.

கொரியாவின் ஹன்வா டிபன்ஸ் நிறுவனம் இந்திய நிறுவனமான லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனத்துடன் இணைந்து K21-105 Medium Tank-ஐ இந்தியாவிற்கு வழங்க முன்வந்துள்ளது.

அதே போல மஹிந்திரா டிபன்ஸ் நிறுவனம் BAE System நிறுவனத்துடன் இணைந்து M8 Armored Gun System அடிப்படையாக கொண்டு மேம்படுத்தப்பட்ட அமைப்பை இந்திய இராணுவத்திற்கு வழங்க முன்வந்துள்ளது.24 டன்கள் எடையுடைய இந்த டேங்க் மூன்றை சி-17 விமானத்தில் ஒரே பறத்தலில் கொண்டு செல்ல முடியும்.

இது தவிர நமது ஆவடி கனரக தொழில்சாலை 125 mm smoothbore gun barrel ஐ அடிப்படையாக கொண்ட இலகுரக டேங்கை அளிக்க முன்வந்துள்ளது.டாடா நிறுவனமும் இலகுரக டேங்கை அளிக்க முன்வந்துள்ளது.தவிரHimachal Futuristics Communications Limited (HFCL) என்ற நிறுவனமும் கலந்து கொள்ள முன்வந்துள்ளது.