களத்தில் மீண்டும் இறங்கிய டிஆர்டிஓ- பினாகா ராக்கெட் ஏவி பரிசோதனை

ஆர்டில்லரி ராக்கெட் அமைப்புகள் மேம்பாடுகளின் தொடர்ச்சியாக DRDO மேம்படுத்தப்பட்ட புதிய தூரம் அதிகரிக்கப்பட்ட பினாகா ராக்கெட்டை பலகுழல் ராக்கெட் லாஞ்சர் உதவியுடன் வெற்றிகரமா ஏவி பரிசோதனை செய்துள்ளது.

ஒடிசா கடலோர பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த ஏவுகணை சோதனை தளத்தில் வைத்து இந்த சோதனை நடத்தப்பட்டது.இதில் இலக்கை நோக்கி அடுத்தடுத்து வேகமான முறையில் 25 ராக்கெட்டுகள் ஏவப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளது.

சோதனையின் போது ராக்கெட்டுகள் மிகச் சிறப்பாக செயல்பட்டன.இந்த ராக்கெட்டுகள் சுமார் 45கிமீ வரை சென்று தாக்க கூடியது.
இந்த ராக்கெட்டை பூனேவில் உள்ள Armament Research and Development Establishment (ARDE) மற்றும் High Energy Materials Research Laboratory (HEMRL) மேம்படுத்தியுள்ளன.