ட்ரோன் மூலம் ஜம்மு விமானத் தளத்தில் தாக்குதல்; புதுமுறையான தாக்குதல்

சிறிய ட்ரோன் மூலம் ஜம்மு விமான தளத்தில் கண்ணிவெடிகள் வீசப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன.இது போன்ற தாக்குதல் நடத்தப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.இரு வெடிகளும் வானூர்தி ஹேங்கருக்கு மிக அருகே வெடித்துள்ளன.

ஒரு ஐஇடி ஒரு கட்டிடத்தின் மேல் பகுதியில் வெடித்து சேதம் விளைவித்ததாகவும் மற்றொன்று திறந்த இடத்தில் விழுந்து வெடித்துள்ளதாகவும் விமானப்படை கூறியுள்ளது.

இது குறித்த விசாரணைக்கு விமானப்படை உத்தரவிட்டுள்ளது.இரண்டாம் குண்டு வெடித்ததில் இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.