EXO SKELETON ஆராய்ச்சியில் நமது DRDO !!

நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமானது மலைப்பகுதிகள் மற்றும் உயர்ந்த பிரதேசங்களில் பணியாற்றும் வீரர்களுக்கு பயன்படும் வகையிலான EXO SKELETON களை தயாரிக்க உள்ளது.

எல்லை பகுதிகளில் நமது ராணுவ வீரர்கள் கடுமையான காலநிலைகளில் அதுவும் மைனஸ் 40 டிகிரி குளிர் நிலவம் பகுதிகளிலும் உயர்ந்த மலை சிகரங்களிலும் பணிபுரிந்து வருகின்றனர்.

இதனையடுத்து வீரர்களுக்கு உதவும் கருவிகளை உருவாக்க சுமார் 50 பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன ஆய்வகங்கள் பணிக்கப்பட்டன அந்த வகையில் EXO SKELETON ஆராய்ச்சிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த EXO SKELETONஐ அணிந்திருக்கும் ஆடை மீதே அணிந்து கொண்டு செயல்பட முடியும், இந்த கருவி நாம் பயன்படுத்தும் சக்தியை தனது இயந்திர உதவி மூலமாக குறைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக பனியில் நடப்பது மலை பிரதேசத்தில் சுமையுடன் ரோந்து செல்வது போன்ற சூழல்களில் இந்த கருவி பேருதவியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை, சீன வீரர்கள் இத்தகைய கருவிகளை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தற்போது இதன் சோதனை வடிவம் ஒன்று தயாரிக்கப்பட்டு உள்ளதாகவும் இனி இதனை மேம்படுத்தி ஒரு முழு திறனுடன் கூடிய EXO SKELETON தயாரிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.