BRRAKING கொரோனாவால் பாதிக்கப்பட்ட தனுஷ் பிரங்கி தயாரிப்பு, அதனுடன் ராணுவம் எழுப்பிய தரச்சோதனை பிரச்சினை !!

  • Tamil Defense
  • June 5, 2021
  • Comments Off on BRRAKING கொரோனாவால் பாதிக்கப்பட்ட தனுஷ் பிரங்கி தயாரிப்பு, அதனுடன் ராணுவம் எழுப்பிய தரச்சோதனை பிரச்சினை !!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தேசி போஃபோர்ஸ் என அழைக்கப்படும் தனுஷ் பிரங்கியின் தயாரிப்பு பணிகள் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில் மறுபுறம் இந்திய தரைப்படை தரச்சோதனை குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு தனுஷ் பிரங்கி படையில் இணைக்க அனுமதி அளிக்கப்பட்ட பிறகு இதுவரை 12 பிரங்கிகள் மட்டுமே படையில் இணைந்துள்ளது, ஒரு ரெஜிமென்டில் 18 பிரங்கிள் இருக்க வேண்டும் ஆனால் ஏறத்தாழ இரண்டு வருடங்களில் ஒரு ரெஜிமென்ட் பிரங்கிகள் கூட படையில் இணையவில்லை என்பது வருத்தமளிக்கும் விஷயம் ஆகும்.

முறைப்படி முதலாவது தனுஷ் பிரங்கி ரெஜிமென்ட் 2019ஆம் ஆண்டே செயல்பாட்டுக்கு வந்திருக்க வேண்டும் அதை போல ராணுவத்திற்கு தாக்குதல் வரம்பு மற்றும் திறன் திருப்திகரமாக இருந்தாலும் பிரங்கியின் தயாரிப்பு தரம் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளது.

ஜபல்பூர் பிரங்கி தொழிற்சாலையால் தயாரிக்கப்படும் தனுஷ் பிரங்கிகளில் சோதனையின் போது Hydraulics, குறிபார்க்கும் அமைப்பு போன்றவைகளில் பிரச்சினை உள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு ஜபல்பூர் ஆயுத தொழிற்சாலை ஊழியர்கள் சிலர் மீது சீன தயாரிப்பு சாதனங்களை ஜெர்மானிய தயாரிப்பு எனக்கூறி பிரங்கியில் பயன்படுத்தியதற்காக சி.பி.ஐ வழக்குபதிவு செய்தததும் குறிப்பிடத்தக்கது.