
கொரானா காரணமாக விமான தயாரிப்பில் கடந்த மூன்று மாதங்களாக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஹால் நிறுவனத்தின் இயக்குநர் மாதவன் அவர்கள் கூறியுள்ளார்.
மூன்றாம் அலை ஏற்படாமல் இருக்கும் பட்சத்தில் ஜீலை முதல் விமான டெலிவரி தொடங்கும் என அவர் கூறியுள்ளார்.மேலும் ஹால் நிறுவனத்திற்கு தேவையான மெட்டீரியல்கள் தாமதமாக கிடைப்பதால் விமான தயாரிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது.தற்போது அனைத்தும் சராசரி நிலைமைக்கு வருகிறதால் விமான தயாரிப்பு விரைவில் துவங்கும் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.