கொரானா பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிஆர்பிஎப் வீரர் சேதன் சீட்டா

  • Tamil Defense
  • June 11, 2021
  • Comments Off on கொரானா பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிஆர்பிஎப் வீரர் சேதன் சீட்டா

சிஆர்பிஎப் கமாண்டன்ட் மற்றும் தனது வீரதீரத்திற்காக கீர்த்தி சக்ரா விருது பெற்றவருமான சேதன் சீட்டா அவர்கள் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் ஹர்யானா எய்ம்ஸ் மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கொரானாவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் தற்போது கொரானா நெகடிவ் வந்த போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த புதன் அன்று அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்த அவருக்கு அளிக்கப்பட்டிருந்த ஆக்சிஜன் எடுக்கப்பட்டது.ஆனால் திடீரென வியாழன் அன்று அவரது ஆக்சிஜன் அளவு 94க்கு குறைந்ததை அடுத்து அவருக்கு மீண்டும் ஆக்சிஜன் சப்ளை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 14,2017 அன்று பந்திபோராவின் ஹஜின் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத என்கௌன்டரில் ஒன்பது தோட்டாக்களை எதிர்த்து நின்றவர் ஆவார்.அவரது மகனும் தற்போது கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

தேசம் அவருக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும் என அவரது மனைவி உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.