ப்ராஜெக்ட் 11356 தல்வார்; இரண்டாவது போர்கப்பலின் கட்டுமான பணி ஆரம்பம் !!

  • Tamil Defense
  • June 21, 2021
  • Comments Off on ப்ராஜெக்ட் 11356 தல்வார்; இரண்டாவது போர்கப்பலின் கட்டுமான பணி ஆரம்பம் !!

ப்ராஜெக்ட் 11356 என்ற திட்டத்தின் கீழ் 4 ஃப்ரிகேட் ரக போர். கப்பல்கள் இந்திய கடற்படைக்காக திட்டமிடப்பட்டு இருந்தது.

அதாவது ஏற்கனவே படையில் இருக்கும் 6 தல்வார் ரக போர்கப்பல்களின் தொடர்ச்சியாக மேலும் 4 தல்வார் ரக கப்பல்களை படையில் இணைக்க முடிவு செய்யப்பட்டது.

இதன்படி கடந்த 2016ஆம் ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் பின்னர் பல்வேறு சிக்கல்களால் 2018ஆம் ஆண்டில் தான் பணிகள் துவங்கப்பட்டது முதல் இரண்டு ரஷ்யாவில் கட்டபட்டு வரும் நிலையில் அடுத்த வருடம் அவை டெலிவரி செய்யப்படும்.

மீதமுள்ள இரண்டு போர் கப்பல்களையும் இந்தியாவில் தொழில்நுட்ப பரிமாற்ற அடிப்படையில் கட்ட கடந்த 2019ஆம் ஆண்டு கோவா கப்பல் கட்டுமான தளத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் செய்து கொண்டது.

அதில் முதலாவது கப்பலின் கட்டுமான பணிகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வரும் நிலையில் இரண்டாவது கப்பலின் கட்டுமான பணிகள் நேற்று துவங்கி வைக்கப்பட்டது இவை இரண்டும் 2026ஆம் ஆண்டு தான் டெலிவரி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கப்பல்கள் முழுக்க இந்திய இரும்பால் தான் கட்டமைக்கப்படுகின்றன என்பதும் இவற்றில் பிரம்மாஸ் ஏவுகணைகள் இணைக்கப்படும் எனவும் கடற்படை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.