ஆஃப்கானிஸ்தான் விவகாரத்தை கையாள புதிய வழிகளை தேடும் CIA !!

  • Tamil Defense
  • June 8, 2021
  • Comments Off on ஆஃப்கானிஸ்தான் விவகாரத்தை கையாள புதிய வழிகளை தேடும் CIA !!

ஆஃப்கானிஸ்தானில் இருந்து படைகளை மிக விரைவாக விலக்க அமெரிக்க அரசு எடுத்துள்ள முடிவு ஆஃகன் அரசுக்கு மட்டுமின்றி அமெரிக்க உளவு அமைப்பான CIAவுக்கும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

இதுநாள் வரை அதாவது ஏறத்தாழ சுமார் 20 வருடங்கள் தொடர்ச்சியாக போர் நடத்திய அமெரிக்கா பல ட்ரில்லியன் டாலர்கள் மற்றும் 2000க்கும் அதிகமான வீரர்களை ஆஃப்கானிஸ்தானில் இழந்தது.

மேலும் தற்போது படை விலக்கம் நடைபெறுவதால் அமெரிக்கா அனைத்து ராணுவ தளங்களையும் விட்டு வெளியேறும் அது அமெரிக்க உளவு அமைப்பான CIA இனி இயங்க முடியாத அளவுக்கு சிகாகலை ஏற்படுத்தி உள்ளது.

அதுவும் மீண்டும் தலிபான்களின் அட்டகாசம் அதிகரித்துள்ள நிலையில் இத்தனை வருடங்களாக CIA தனது நடவடிக்கைகளை தங்கு தடையின்றி நடத்துவதற்காக கட்டியமைத்த மிகப்பெரிய நெட்வொர்க் அழிவின் விளிம்பில் உள்ளது, எனவே தொடர்ந்து இயங்க புதிய வழிமுறைகளை தேடி வருகிறது.

இதையடுத்து ஆஃப்கானிஸ்தான் உடன் எல்லைகளை பகிர்ந்து கொள்ளும் நாடுகளில் ராணுவ தளங்களை அமைக்கவோஅல்லது அந்நாட்டு தளங்களல பயன்படுத்தி கொள்ளவோ அமெரிக்க வழிகளை தேடி வருகிறது அதுவும் பாகிஸ்தானுடன் மிகுந்த நெருக்கம் காட்டி வருகிறது.

ஆனால் பாகிஸ்தான் அரசோ எந்த சூழ்நிலையிலும் வெளிநாட்டு ராணுவ தளங்கள் அல்லது ராணுவ வீரர்கள் அல்லது தளவாடங்களை தங்களது மண்ணில் அனுமதிக்க முடியாது என கறாராக கூறி வருகிறது.

அதிலும் பாகிஸ்தான் தாலிபான்களுக்கு போர் நேரத்தில் பயிற்சி ஆயுதம் மற்றும் முக்கிய தலைவர்களுக்கு பாதுகாப்பு அளித்ததும் குறிப்பிடத்தக்கது மேலும் ஆஃப்கானிஸ்தானில் இந்தியாவுக்கு எதிராக தாலிபான்களை களமிறக்கவும் திட்டமிட்டு உள்ளது ஆகவே தாலிபான்களை ஒழிக்க பாகிஸ்தான் உதவுமா என்பதும் கேள்விக்குறி தான்.

பாகிஸ்தானில் அமெரிக்க ராணுவ தளம் அமைவதை அங்கு மிகப்பெரிய அளவில் முதலீடு செய்துள்ள சீனா நிச்சயமாக விரும்பாது ஆகவே சீனதரப்பு பாகிஸ்தான் அரசுக்கு அழுத்தம் கொடுக்கலாம்.

இனி பாகிஸ்தானை விட்டால் அமெரிக்காவுக்கு ஒரே வழி மத்திய ஆசிய நாடுகள் தான் ஆனால் மத்திய ஆசிய நாடுகளில் அமெரிக்க தளம் அமைவதை ரஷ்யா விரும்பாது அதுவும் தற்போது நேட்டோ ரஷ்யா இடலயிலான பிரச்சினை நிலவும் நேரத்தில் நிச்சயமாக மத்திய ஆசிய நாடுகளுக்கு ரஷ்யா கடும் நெருக்கடி கொடுக்கலாம்.

இதையெல்லாம் தாண்டி அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் இடம் அளித்தால் பாக் அமெரிக்கா இடையெ பன்மடங்கு நெருக்கம் ஏற்படலாம் கடந்த காலங்கள் போல இந்திய எதிர்ப்பு நடவடிக்கைகள் அமெரிக்கா முன்னெடுக்கலாம் இது நமக்கு பின்னடைவாக இருக்கும்.

CIA தலைவர் வில்லியம் பர்ன்ஸ் ரகசியமாக பாகிஸ்தான் சென்று பாக் ராணுவ தளபதி மற்றும் ISI இயக்குனரை சந்தித்து உள்ளார் மேலும் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஆஸ்டின் அவ்வப்போது பாக் ராணுவ தளபதியுடன் பேசி வருகிறார் இதன்மூலம் அமெரிக்கா கடுமையாக முயற்சிப்பது வெட்ட வெளிச்சமாகிறது.

ஆனால் அதுவே எங்கும் தளம் அமைக்க முடியாத சூழலில் ஆஃப்கானிஸ்தானை அமெரிக்கா இழக்கலாம் அப்படி நடந்தால் பாகிஸ்தான் ஆதரவுடன் தாலிபான்களின் ஆட்சி நடைபெறும் இந்தியா ஆஃப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றப்படும் அதுவும் நமக்கு பேரிழப்பாகும்.

ஆனால் இந்தியா ஆஃப்கானிஸ்தானில் தனது இருப்பல வலுப்படுத்திக் கொள்ள துருப்புகளை அனுப்பாமல் தஜிகிஸ்தானில் உள்ள ஃபார்கோர் விமானப்படை தளத்தில் இருந்து மிக்29 போர் விமானங்களை அனுப்பி தாலிபான்களுக்கு வேட்டு வைக்கலாம் அத்துடன் அமெரிக்க ஆதிக்கமும் இந்த பிராந்தியத்தில் இருந்து ஒழிக்கப்படும், பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் பின்னடைவாக அமையும் .