
மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் உள்ள இந்திய வங்கதேச எல்லையோரம் சந்தேகத்துக்கு இடமான செயல்களில் ஈடுபட்டதாக சீனர் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
36 வயதான ஹான் ஜூன்வே எனும் அந்த நபரிடம் இருந்து சீன பாஸ்போர்ட், வங்கதேச விசா , ஒரு லேப்டாப் மற்றும் மூன்று சிம் கார்டுகள் கைபற்றப்பட்டு உள்ளன மேலும் இவன் சீனாவில் உள்ள ஹூபே நகரை சேர்ந்தவன் ஆவான்.
கடந்த மாதம் 2ஆம் தேதி வங்கதேச தலைநகர் டாக்கா வந்து ஜூன்வே பின்னர் அங்கிருந்து இந்திய எல்லையோரம் அமைந்துள்ள சப்பைநவாப்கன்ஜ் மாவட்டத்திற்கு சென்று அங்கிருந்து இந்தியாவுக்குள் நுழைய முயன்றுள்ளான்.
அவன் அத்துமீறி நுழைந்த போது ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த எல்லை பாதுகாப்பு படையினர் அவனை சரணடைய கூறும்போது தப்பியோட முயன்றான்,
ஆனாலும் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் அவனை விரட்டி சென்று பிடித்து கைது செய்து பின்னர் மொஹதிபூர் எல்லை காவல் சாவடிக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.