பயிற்சி இல்லாத சீன வீரர்கள்- இந்திய தளபதி ராவத் கருத்து

லடாக் போன்ற உயர்மலைப்பகுதிகளில் செயல்பட சீன வீரர்களுக்கு தகுந்த பயிற்சி இல்லை என இந்தியாவின் ஒருங்கிணைந்த படைத் தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார்.தற்போது சீனப்படை திபத்தியர்களை படையில் இணைத்து இந்திய எல்லையில் களமிறக்க திட்டமிட்டுள்ளது.

கல்வான் மோதலுக்கு பிறகு இந்திய எல்லையில் செயல்பட சீன வீரர்களுக்கு போதுமான திறன் இல்லை என்பதை சீனா உணர்ந்துள்ளது.மக்கள் அதிகமுள்ள பகுதிகளில் இருந்து தான் சீனவீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.மேலும் அவர்கள் குறைந்த காலத்தில் தான் இராணுவத்தில் உள்ளனர்.லடாக் போன்ற கடுமையான மலைப்பாங்கான பகுதிகளில் செயல்பட அவர்கள் ஏற்றவர்கள் அல்லர்.

சிக்கிம் எதிரே உள்ள சம்பி பள்ளத்தாக்கு பகுதிகளில் திபத்தியர்களை உள்ளடக்கிய புதிய மிலிசியா குழுவான மிமாங் சேதோவை சீனா களமிறக்கிய பிறகு இந்த தகவலை தளபதி ராவத் கூறியுள்ளார்.

இந்த திபத்தியர்கள் நேரடியாக சீன இராணுவத்தில் இணைக்கப்படவில்லை.அவர்களுக்கு சீருடையோ அல்லது இராணுவ தரங்களோ ( ரேங்க்) கிடையாது.ஒரு குழுவுக்கு 100 பேர் வீதம் இரு குழுக்கள் தற்போத பயற்சியளிக்கப்பட்டு களமிறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.