கல்வான் மோதல் சீன வீரர்களின் இறப்பு எண்ணிக்கை குறித்து கேள்வியில் எழுப்பியவருக்கு சிறை தண்டனை !!

  • Tamil Defense
  • June 1, 2021
  • Comments Off on கல்வான் மோதல் சீன வீரர்களின் இறப்பு எண்ணிக்கை குறித்து கேள்வியில் எழுப்பியவருக்கு சிறை தண்டனை !!

சீனாவை சேர்ந்த பிரபலமான வலைதள செயல்பாட்டாளர் கல்வான் மோதலில் இறந்த சீன வீரர்களின் இறப்பு குறித்து கேள்வி எழுப்பியதால் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார், கி ஜூமிங் எனும் அந்த நபர் சீன அரசு நான்கு வீரர்களை கல்வான் மோதலில் இழந்ததாக அறிவித்ததை பற்றி கேள்வி எழுப்பினார்,

அதாவது தனது வெய்போ கணக்கில் அதிகமான சீன ராணுவ வீரர்கள் இறந்துள்ளதாகவும் அதனை பற்றிய தகவல்களை சீனா மூடி மறைப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இதனையடுத்து கடந்த 2018ஆம் ஆண்டு ராணுவ வீரர்கள் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்களை இழவிபடுத்துவதை தண்டனைக்குரிய சட்டமாக அறிவித்தது.

இந்த சட்டத்தின்படி தண்டிக்கப்படும் முதலாவது நபர் கி ஜூன்மிங் ஆவார், மேலும் கடந்த ஃபெப்ரவரி முதல் ஆறு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

நான்ஜிங் நகர நீதிமன்றம் கி ஜூன்மிங் தனது குற்றத்தை ஒப்புகொண்டதாகவும் ஆகவே அவருக்கு சிறை தண்டனை விதிப்பதாக தீர்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.