கிழக்கு லடாக்கில் போர்பயிற்சி நடத்திய சீனா; கண்காணிக்கும் இந்தியா

21 முதல் 22 போர் விமானங்களின் மூலம் கிழக்கு லடாக் பகுதியில் சீன விமானப்படை போர்பயிற்சி நடத்தியளள்ளது.ஜே-11 மற்றும் ஜே-16 விமானங்கள் உதவியுடன் லடாக்கில் இந்த பயிற்சியை சீனா மேற்கொண்டுள்ளது.

இந்த போர்பயிற்சியை இந்தியா மிக உன்னிப்பாக கவனித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சீனாவின் ஹோடன் ,கர் குன்சா மற்றும் கஷ்கர் வான் தளங்களில் உள்ள விமானங்கள் இந்த பயிற்சியில் பங்கேற்றன.சீனா இந்த தளங்களை சில நாட்களுக்கு முன்னதாக மறுகட்டுமானம் செய்து நவீனப்படுத்தியது குறிப்பிடத்தக்கது ஆகும்.

இந்தியாவும் லடாக்கில் தனது போர்விமானங்கள் மூலம் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.