மலேசிய வான் பகுதிக்குள் 16 சீன விமானப்படையின் விமானங்கள் நுழைந்துள்ளதை அடுத்த அவற்றை வழிமறிக்க மலேசியா தனது விமானங்களை அனுப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மலேசியாவின் சரவாக் பகுதியில் உள்ள வான் பாதுகாப்பு மையம் சீனர்களின் இந்த ஊடுவலை கண்டறிந்துள்ளது.
இவற்றை விரட்டி அடிக்க மலேசிய விமானப்படையின் விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடல்மட்டத்தில் இருந்து 23000-27000அடி உயரத்தில் 290 நாட் வேகத்தில் பறந்து மலேசிய கடல்சார் பகுதிக்குள் நுழைந்துள்ளன.
மலேசிய விமானப்படை ஹாக் 208 விமானங்களை அனுப்பியுள்ளன.அதன் பின்பு சீன விமானங்கள் வந்த வழி திரும்பியுள்ளன.
சீன விமானப்படையின் Il-76 மற்றும் Xian Y-20 போக்குவரத்து விமானங்கள் நுழைந்ததாக மலேசியா கூறியுள்ளது.