திபத்தில் புல்லட் ட்ரெயின் அமைக்கும் சீனா ! இந்தியாவிற்கு ஆபத்தா?

  • Tamil Defense
  • June 26, 2021
  • Comments Off on திபத்தில் புல்லட் ட்ரெயின் அமைக்கும் சீனா ! இந்தியாவிற்கு ஆபத்தா?

திபத் தலைநகர் லாசாவில் இருந்து திபத்தின் தொலை தூர நகரமான நியாங்சி வரை சீனா மின்சாரத்தில் இயங்கக்கூடிய புல்லட் ரயிலை கட்டுமானம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்திய மாநிலமான அருணாச்சல் ஒட்டி வரக்கூடிய இந்த பாதையின் நீளம் 435கிமீ ஆகும்.தற்போது திபத் பகுதியில் சீன இராணுவம் போர்பயிற்சிகள் நடத்தி வருகிறது.

இந்தியாவில் லடாக் ,சிக்கிம் மற்றும் அருணாச்சலை ஒட்டிய சீனப்பகுதிகளுக்குள் சீனா உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி வருவது இந்தியாவிற்கு மிக ஆபத்தான ஒன்றாகும்.

கடந்த ஒரு வருடத்தில் மட்டும் கனரக ஆயுதங்கள் மற்றும் போர்விமானங்கள் சகிதம் சீனா திபத்தில் 100க்கும் மேற்பட்ட போர்பயிற்சிகளை நடத்தியுள்ளது.கல்வான் தாக்குதலுக்கு பிறகு சீனா எல்லை முழுதும் மோதலை எடுத்து சென்றுள்ளது.லடாக், அருணாச்சல் ,சிக்கிம் என (நேபாளம் கூட ) அந்த பகுதிகளில் படைப்பலத்தை அதிகரித்துள்ளது.

போர் அல்லது மோதல் எனும் போது தளவாடங்களை எவ்வளவு மிக விரைவாக முன்னனி படைகளுக்கு கொண்டு செல்வதில் தான் வெற்றியின் சூட்சமம் உள்ளது.இதற்காக தான் சீனா எல்லைக் கட்டமைப்பில் ஈடுபட்டு வருகிறது.