ஸ்டீல்த் குண்டுவீச்சு விமானத்தை லடாக்கில் சோதிக்கும் சீனா

  • Tamil Defense
  • June 14, 2021
  • Comments Off on ஸ்டீல்த் குண்டுவீச்சு விமானத்தை லடாக்கில் சோதிக்கும் சீனா

கிழக்கு லடாக்கில் உள்ள ஹோடன் விமான தளத்தில் சீனா தனது ஷியான் H-20 ஸ்டீல்த் குண்டுவீசு விமானத்தை சோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எல்லையில் இந்திய சீன மோதல் போக்கு இன்னும் தொடர்ந்து வருகிறது.மோதலை தீர்க்க இந்திய சீன இராணுவங்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

ஜீன் 8 அன்று இந்த குண்டுவீச்சு விமானம் சோதனை தொடங்கியதாகவும் ஜீன் 22 வரை இந்த சோதனை தொடரும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.அதிகனரக குண்டுகளை சுமந்து நெடுந்தூரம் வகை இந்த H-20 விமானம் பறக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமெரிக்கா மற்றும் இரஷ்யாவிற்கு பிறகு ஸ்டீல்த் குண்டு வீசு விமானம் மேம்படுத்திய நாடாக தற்போது சீனா உருவாகியுள்ளது.