
சீனா அதிக அளவு தனது ஜே-20 ஐந்தாம் தலைமுறை விமானத்தை படையில் இணைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.1990களில் தொடங்கப்பட்ட J-XX திட்டத்தின் வழியாக இந்த J-20 விமானங்களை ஒரு வானாதிக்க விமானமாக( air superiority fighter ) சீனா மேம்படுத்தியது.2016ல் நடைபெற்ற சீன சர்வதேச ஏவியேசன் மற்றும் ஏரோஸ்பேஸ் கண்காட்சியில் தான் முதல் முறையான இந்த விமானத்தை வெளிக்கொணர்ந்தது.
கடந்த மார்ச் 2017ல் படையில் இணைக்கப்பட்ட ஜே-20 விமானம் செப்டம்பர் 2017ல் தனது காம்பாட் பயிற்சிகளை மேற்கொண்டது.அதன் பிறகு ஜே-20 ஐ உள்ளடக்கிய முதல் விமானப் பிரிவு 2018 பிப்ரவரியில் ஏற்படுத்தப்பட்டது.
மணிக்கு 2100கிமீ வேகம் பறக்கும் திறனுடைய இந்த விமானத்தின் நீளம் 20மீ ஆகும் மற்றும் அகலம் 13மீ மற்றும் உயரம் 4.45மீ ஆகும்.
தற்போது இந்த விமானங்களை சீனா அதிக அளவு படையில் இணைத்து வருகிறது.