ஹைப்பர்சானிக் தொழில்நுட்பத்தில் ஒட்டுமொத்த உலகை விடவும் சுமார் 30 வருடங்கள் முன்னால் உள்ள சீனா !!

  • Tamil Defense
  • June 2, 2021
  • Comments Off on ஹைப்பர்சானிக் தொழில்நுட்பத்தில் ஒட்டுமொத்த உலகை விடவும் சுமார் 30 வருடங்கள் முன்னால் உள்ள சீனா !!

சீனா பெய்ஜிங் நகரில் ஹைப்பர்சானிக் விமானங்கள் மற்றும் இன்னபிற ஏவுகணைகளை சோதனை செய்யும் காற்று குழாய் (WIND TUNNEL) அமைப்பை உருவாக்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அமைப்பு மூலமாக மணிக்கு 23,000 கிலோமீட்டர் வேகத்தில் (அதாவது ஒலியை விடவும் 30 மடங்கு அதிக வேகத்தில்) செல்லும் வானூர்திகளை சோதித்து உருவாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய வசதி மூலமாக சீனா ஹைப்பர்சானிக் தொழில்நுட்பத்தில் ஒட்டுமொத்த உலகை விட குறிப்பாக மிகவும் வளர்ந்த நாடுகளை விடவும் சுமார் 30 வருடங்கள் முன்னிலையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மொத்தமாக சீனா மேற்குறிப்பிட்ட WIND TUNNELகளில் இரண்டை உருவாக்க உள்ளது, இந்த தொழில்நுட்பம் மூலமாக 90% செலவும் பயண நேரமும் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இதன் எல்லை அத்துடன் நில்லாமல் அதனையும் தாண்டி ராணுவ பயன்பாடுகளிலும் நிச்சயமாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

தற்போதைக்கு சீன ராணுவத்தில் டாங்ஃபெங்-17 (DF-17) எனும் அதிவேக ஏவுகணைக உள்ளது இது மணிக்கு 7600 மைல் வேகத்தில் பயணித்து விமானந்தாங்கி கப்பல்களை பிரத்யேகமாக தாக்கி அழிக்க உருவாக்கப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல் ஆகும்.