
சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டின் பிரதான ஆயுத தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக ஆயுத தொழிற்சாலைகள் வாரியம் விளங்கி வருகிறது.
தற்போது துப்பாக்கிகள், தோட்டாக்கள், குண்டுகள், டாங்கிகள், பிரங்கிகள், கவச வாகனங்கள், விமான எதிர்ப்பு துப்பாக்கிகள் என பல்வேறு வகையான தளவாடங்களை ஆகியவற்றை தயாரித்து வருகிறது.
ஆனால் மிக நீண்ட காலமாகவே சீர்த்தருத்தங்கள் எதுவம் செய்யப்படவில்லை அதனால் பல்வேறு நிர்வாக ரீதியான மற்றும் தயாரிப்பு ரீதியான பிரச்சினைகள் நிலவி வந்தன, இதனால் பல ராணுவ வீரர்கள் உயர் இழக்க நேரிட்டதும் துரதிர்ஷ்டவசமானது.
இந்த நிலையில் தற்போது மத்திய அரசு இந்த அமைப்பை கார்ப்பரேட் ஸ்டைலில் நிர்வகிக்க முடிவு செய்து அதற்கான அனுமதியை நேற்று வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது, இந்த நிதியாண்டின் இறுதியில் இது செயல்பாட்டுக்கு வரும் என கூறப்படுகிறது.
இந்த திட்டத்தின்படி தற்போது உள்ள 41 ஆயுத தொழிற்சாலைகள் வாரிய பணிமனைகள் 7 அரசுத்துறை நிறுவனங்களின் கீழ் கொண்டு வரப்பட்டு கார்ப்பரேட் முறையில் நிர்வகிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் தயாரிக்கப்படும் தளவாடங்களினதரம் அதிகரிக்கும், நவீனத்துவம் அதிகமாக இருக்கும் எனவும் சர்வதேச சந்தையில் போட்டி போடும் அளவுக்கு திறன் அதிகரிக்கும் எனவும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.