கார்கில் போரில் 1 பீகார் ரெஜிமென்ட் எவ்வாறு சண்டையிட்டது என்பது குறித்த சிறிய வரலாற்று பதிவு.
முதலாக படாலிக் செக்டாரில் இந்திய இராணுவத்தின் நடவடிக்கைகள் மிக மிக மெதுவாகவே நடைபெற்றன.சண்டையிடுவதற்காக தயார் படுத்துதலும் நீண்ட நேரம் பிடித்தது.இதற்கென வீரர்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் எதிரிகளின் கண்களுக்கு தெளிவாக புலப்படுவதாகவே இருந்தது.பாதைகள் வழியாக நமது வீர்ரகள் ஆயுதங்கள் கொண்டு செல்வதையும் பாக் படைகளால் எளிதாக கண்காணிக்க முடிந்தது.
படாலிக் செக்டாரில் தொடங்கிய முதல் கட்ட தாக்குதல் பாய்ண்ட் 4268 மலை யில் முதல் பீகார் ரெஜிமென்டால் 29 மே 1999ல் தொடங்கியது.எதிரிகளின் இருப்பு குறித்த உளவு தகவல்கள் இல்லாததாலும் தேவையான ஆர்டில்லரிகள் இல்லாததாலும் படை வீரர்களால் முழுமையான வெற்றியை ஈட்ட முடியவில்லை.இந்த தாக்குதலில் சில எதிரி பங்கர்கள் மட்டும் மேஜர் மாரியப்பன் சரவணன் அவர்கள் தலைமையில் சென்ற பிரிவால் கைப்பற்றப்பட்டது.இந்த தாக்குதலில் நாய்க் கனேஷ் பிரசாத் மற்றும் நாய்க் சத்ருகன் சிங் ஆகிய வீரர்கள் தங்களது வீரத்தை மிகச் சிறப்பாக வெளிக்காட்டினர்.
வீரர்கள் வீரத்தீரத்தை காட்டி இடத்தை கைப்பற்றிய போதும் அவர்களால் அவ்விடத்தை தொடர்ந்து வைத்திருக்க முடியவில்லை.எனவே முழுபலத்தை கொண்டு தாக்க வீரர்கள் முடிவெடுத்தனர்.எனவே பாயிண்டை மேற்கு பகுதியில் இருந்து தாக்க வீரர்கள் திட்டமிட்டனர்.ஆனால் பகுதியோ க்ராக்ரா பார் நாலா பகுதியை ஒட்டி அமைந்திருந்தது.இந்த சங்க்ருதி காம்ப்ளெக்ஸ் பகுதியில் பாக் படைகள் பாதுகாப்பான முறையில் தடுப்பு அரண்களை ஏற்படுத்தி மிகுந்த பலத்துடன் இருந்தனர்.
இந்த பகுதியில் வீரர்கள் தாக்குதல் நடத்தியும் வெற்றிபெற முடியவில்லை.
எனவே தாக்குதலை கிழக்கு நோக்கி திருப்பினர்.கிழக்கு பகுதியில் உள்ள பாயிண்ட் 5203 பகுதியை கைப்பற்றி அதன் வழியாக கலுபார் மற்றும் சோர்பத் லா பகுதியை தொடர்ந்து ஆபரேசன் நடத்த முடியும் என முடிவெடுக்கப்பட்டது.நிலைமை குறித்து ஆராயபட்ட பிறகு மே 1999 இறுதியில் மேற்கு இராணுவ கட்டளையக தளபதி மற்றும் GOC 15 கோர் படைகளிடன் கருத்துக்கள் கேட்கப்பட்டது.

இரு பிரிவுகளும் ஒப்புக்கொண்ட பிறகு 3வது இன்பான்ட்ரி டிவிசன் மற்றும் 70வது இன்பான்ட்ரி பிரைகேட் படைகளுக்கு அறிவுரைகள் கொடுக்கப்பட்டன.படைகள் கடுமையான தாக்குதலை நடத்தி மீண்டும் கைப்பற்றப்பட்டது. 1 பீகார் படைப் பிரிவை சேர்ந்த மேஜர் சரவணன் ,நாய்க் கனேஷ் பிரசாத் மற்றும் மேலும் இரு வீரர்களின் திருவுடல்கள் நமது வீரர்களால் மீட்கப்பட்டது.
9 ஜீலை அன்று 1 பீகார் 15000 அடிகள் மலையேறி மிகக் கடுமையாக போரிட்டு பாயிண்டு 5103 மலையை கைப்பற்றியது.அதன் பிறகு குகர்தாங் பகுதியில் 1/11 கூர்கா பட்டாலியன் உடன் இணைந்து மேலதிக தாக்குதல்களை நடத்தியது.
இந்தியாவிற்கு வெற்றி தேடித்தர வீரமரணம் அடைந்த வீரர்களின் தியாகங்களை நாம் இந்த நொடியில் நினைவு கூர்வோம்.