துருக்கியிடம் இருந்து இராணுவ தளவாடம் பெற்று படையில் இணைத்துள்ள வங்கதேசம்

  • Tamil Defense
  • June 24, 2021
  • Comments Off on துருக்கியிடம் இருந்து இராணுவ தளவாடம் பெற்று படையில் இணைத்துள்ள வங்கதேசம்

துருக்கியிடம் இருந்து வங்கதேச இராணுவம் T-300 டைகர் பலகுழல் ராக்கெட் லாஞ்சர்களை பெற்று தற்போது படையில் இணைத்துள்ளது.கோர் ஆப் மிலிட்டரி போலிஸ் மையத்தில் நடைபெற்ற விழாவில் இந்த தளவாடத்தை வங்கதேசம் படையில் இணைத்துள்ளது.

கானொளி மூலம் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அந்நாட்டு பிரதமர் சேக் ஹசினா இந்த புதிய ஆயுதம் வங்கதேச இராணுவத்திற்கு புதிய பரிணாமத்தை அளிக்கும் என பேசியுள்ளார்.

கடந்த மார்ச் 2019ல் துருக்கியின் ROKETSAN நிறுவனத்திடம் இருந்து இந்த மீடியம் ரேஞ்ச் ராக்கெட் லாஞ்சர்கள் வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

சீனாவின் WS-1B இராக்கெட் லாஞ்சரை அடிப்படையாக கொண்டு தான் இந்த T-300 இராக்கெட் லாஞ்சர் அமைப்பை ROKETSAN நிறுவனம் தயாரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த T-300 இராக்கெட் லாஞ்சரில் நான்கு ஏவுகுழல்கள் இருக்கும்.இதன் வழியாக 300mm TR-300-series munition களை ஏவ முடியும்.இதில் இரு வகைகள் உள்ளது.ஒன்று Guided மற்றும் மற்றொன்று unguided ராக்கெட்டுகள் ஆகும்.

TR-300E unguided ராக்கெட்டுகள் 40-100கிமீ வரையும் , TRG-300 Tiger guided பிளாக் 1 வகை 30 to 120கிமீ தூரமும் ,TRG-300 Tiger guided பிளாக் 2 வகை 20 to 90கிமீ வரையும் சென்று தாக்க வல்லது.