அதிநவீன உள்நாட்டு பிரங்கியின் சோதனை விரைவில் ஆரம்பம் !!

  • Tamil Defense
  • June 5, 2021
  • Comments Off on அதிநவீன உள்நாட்டு பிரங்கியின் சோதனை விரைவில் ஆரம்பம் !!

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ATAGS – ADVANCED TOWED ARTILLERY GUN அதாவது அதிநவீன இழுவை பிரங்கியின் பாலைவன சோதனைகள் ஜூன் மாதம் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, இந்த பிரங்கி டாடா பவர், டி.ஆர்.டி.ஒ மற்றும் பாரத் ஃபோர்ஜ் ஆகியவற்றால் இணைந்து தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு அமைச்சக வட்டார தகவல்களின்படி இந்த பாலைவன சோதனைகள் நிறைவு பெற்றதும் இந்த பிரங்கி அமைப்புக்கான ஆர்டர்கள் கையெழுத்து ஆகி விரைவில் படையில் இணையும் என தெரிகிறது, மேலும் ஏற்கனவே அதிக உயர பகுதிகள், மலை பிரதேச சோதனைகள் முடிவு பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 1999 முதலே பல்வேறு வகையான பிரங்கிளை பெற ராணுவம் ஆர்வம் காட்டி வந்தது அதுவும் குறிப்பாக இழுவை பிரங்கிளை நீண்ட காலமாக வாங்க முயற்சித்தும் நடைபெறாத நிலையில் கடந்த 2010ஆம் ஆண்டு ATAGS திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.