5000 கிலோ தர்பூசணியை விற்க முடியாமல் தவித்த விவசாயி; சந்தை விலைக்கே வாங்கி உதவிய இந்திய ராணுவம் !!
ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் நகரில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒர் கிராமத்தை சேர்ந்த விவசாயி திரு. ரஞ்சன் குமார் மஹதோ ஆவார்.
25 வயதான இவர் தனது 25 ஏக்கர் தோட்டத்தில் விளைந்த சுமார் 5000 கிலோ அளவிலான தர்பூசனியை கொரோனா பெருந்தொற்று காரணமாக விற்க முடியாமல் அவதிப்பட்டார்.
அப்போது நல்ல விளைச்சல் கிடைத்த நிலையில் அதனை ஒதுக்க விருப்பமின்றி ராணுவத்தினருக்கு இலவசமாக வழங்க முன்வந்தார், இதனை ராணுவ அதிகாரிகள் அறிந்து கொண்டனர்.
ராம்கர் நகரில் தான் சீக் ரெஜிமென்ட்டின் ரெஜிமென்ட்டல் சென்டர் அமைந்துள்ளது அந்த மையத்தின் கட்டளை அதிகாரி ப்ரிகேடியர் எம். ஶ்ரீகுமார் தலைமையிலான ராணுவ அதிகாரிகள் விவசாயியின் வீட்டுக்கு சென்று,
5000 கிலோ தர்பூசணியை சந்தை விலைக்கே ராணுவத்திற்காக கொள்முதல் செய்துவிட்டு அவரது குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உணவு பண்டங்களை கொடுத்து விட்டு வந்தனர்.
இதனை சற்றும் எதிர்பாராத விவசாயி ரஞ்சன் குமார் தனது விளை பொருட்கள் மற்றும் உழைப்பு வீண் போகாததை மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ப்ரிகேடியர் ஶ்ரீகுமார் ரஞ்சன் குமார் இரண்டு வருடங்கள் முன்பு 15 லட்சம் முதலீடு செய்து விவசாயம் செய்ய தொடங்கியதை அறிந்தோம் தற்போது அவரிடம் 40 பேர் பணியாற்றி வருகின்றனர், இது அவர்களின் வாழ்வாதாரமும் கூட என்றார்.