
சில மாதங்களுக்கு முன்னர் அர்ஜென்டினா விமானப்படை புதிய விமானங்களை வாங்க விரும்பிய நிலையில் சீன குழு ஒன்று அர்ஜென்டினா சென்று அந்த ஆர்டரை உறுதி செய்தது.
அந்த வகையில் அர்ஜென்டினா விமானப்படைக்கு 12 JF-17 போர் விமானங்களை விற்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாக இருந்த நிலையில் தீடிரென ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அதாவது அர்ஜென்டினா JF-17 விமானங்களின் விலை அதிகமாக இருப்பதாக கூறி விலையை குறைக்க வலியுறுத்தி உள்ளது இல்லாவிட்டால் தேஜாஸ் விமானங்களை வாங்குவோம் என கறாராக கூறியுள்ளது.
ஆனால் சீன தரப்போ ஒரு JF-17 விமானத்திற்கு 50 மில்லியன் டாலர் என்பது மிகவும் சரியான விலை தான் என பதில் கொடுத்துள்ளது.
ஆகவே இந்த ஒப்பந்தத்தை சுற்றி பரபரப்பும் எதிர் பார்ப்புகளும் தொற்றி கொண்டு உள்ளது என்பதை நாம் மறுக்க முடியாது.