சிரியாவில் அமெரிக்க வீரர்களை வழிமறித்த ரஷ்ய வீரர்கள் !!

  • Tamil Defense
  • June 23, 2021
  • Comments Off on சிரியாவில் அமெரிக்க வீரர்களை வழிமறித்த ரஷ்ய வீரர்கள் !!

சில நாட்கள் முன்னர் வடகிழக்கு சிரியாவில் அமெரிக்க ராணுவ கான்வாய் ஒன்றை ரஷ்ய வீரர்கள் வழிமறித்து நிறுத்தியுள்ள நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிரியாவின் ஹசாகேஹ் மாகாணத்தில் உள்ள தால் தமர் நகருக்கு 10 கிலோமீட்டர் மேற்கே M4 சாலையில் நான்கு அமெரிக்க ராணுவ வாகனங்கள் ரஷ்ய படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன.

இதுபற்றி அறிக்கை வெளியிட்டுள்ள ரஷ்ய அமலில் இருக்கும் ஒப்பந்தத்தின் படி அமெரிக்கா முன்னரே தகவல் தந்திருக்க வேண்டும் ஆனால் அதை செய்யவில்லை ஆகவே இப்படி செய்ததாக கூறியுள்ளது.