படைகள் வெளியேறிய பின்னர் ஆஃப்கன் படைகளுக்கு வான்வழி உதவி வழங்க அமெரிக்கா மறுப்பு !!

  • Tamil Defense
  • June 17, 2021
  • Comments Off on படைகள் வெளியேறிய பின்னர் ஆஃப்கன் படைகளுக்கு வான்வழி உதவி வழங்க அமெரிக்கா மறுப்பு !!

அமெரிக்க மத்திய கட்டளையக தளபதி ஃப்ராங்க் மெக்கென்ஸி சமீபத்தில் ஆஃப்கானில் இருக்கும் அமெரிக்க படைகள் வெளியேறிய பின்னர் ஆஃப்கன் படைகளுக்கு வான்வழி உதவி அளிக்கப்படாது என கூறியுள்ளார்.

இவரின் இந்த பேச்சு உலகளவில் பாதுகாப்பு வல்லுநர்கள் மற்றும் முன்னாள் அமெரிக்க ராணுவ உயரதிகாரிகள் மத்தியில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

ஆப்கானிஸ்தான் படை விலக்கல் நடவடிக்கையை அமெரிக்க அரசு முறையான திட்டமிடல் இன்றி சரியான தொலைநோக்கு பார்வையின்றி செயல்படுத்துவதாக குற்றச்சாட்டு வைக்கின்றனர்.

ஆஃப்கானிஸ்தான் பாகிஸ்தான் பிராந்தியத்தில் மட்டுமே தாலிபான்கள் ஐ.எஸ் அல் காய்தா உட்பட 20க்கும் அதிகமான பயங்கரவாத அமைப்புகள் தொடர்ந்து இயங்கி வருகின்றன இனி அவற்றை கண்காணிக்க முடியாது எனவும்,

தாலிபான்கள் ஏற்கனவே ஆஃப்கானிஸ்தானில் பல இடங்களில் தாக்குதல்களை துவங்கி உள்ள நிலையில் ஆஃப்கானிஸ்தான் மீண்டும் தாலிபான்கள் கையில் செல்லும் ஆபத்து உள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.

அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன் தொடர்ந்து ஆஃப்கன் படைகளுக்கு ஆதரவு வழங்க அரசை வலியுறுத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.