
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் அமைந்துள்ள மத்திய ஆயுத கிடங்கில் இருந்து ஏகே47 ரக துப்பாக்கிகள் திருடப்பட்டு நக்சலைட்டுகளுக்கு விற்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெளிவந்து உள்ளது.
தேசிய புலனாய்வு முகமை நடத்திய விசாரணையில் ஆயுத கிடங்கின் முன்னாள் மற்றும் இன்னாள் பணியாளர்கள் ஆயுத வியாபாரிகளுடன் இணைந்து ஏகே47 மற்றும் SLR துப்பாக்கிகளை திருடியது தெரிய வந்துள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு சம்ஷேர் ஆலம் என்பவனிடம் இருந்து 3 AK47 ரக துப்பாக்கிகள் கைபற்றபட்ட வழக்கில் 26 பேர் பீஹார் காவல்துறை வழக்குபதிவு செய்தது.
பின்னர் வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு அமைப்புக்கு கைமாறியது அதனையடுத்து மீண்டும் 14 பேர் மீது வழக்கு பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் மேற்குறிப்பிட்ட தகவல்கள் தெரிய வந்தன.
மேலும் இக்கும்பலின் தலைவனாக புருஷோத்தம் லால் எனும் ஒய்வு பெற்ற ஆயுத கிடங்கு பணியாளர் செயல்பட்டு உள்ளதும் தெரிய வந்தது.
திருடப்பட்ட துப்பாக்கிகள் பீஹார் மாநிலம் முங்கரை தளமாக கொண்டு செயல்படும் ஆயுத வியாபாரிகளுக்கு சப்ளை செய்யப்பட்டு பின்னர் நக்சல்கள் மற்றும் கிரிமினல்களுக்கு விற்கப்படடுள்ளது.
இதுவரை சுமார் 22 திருடப்பட்ட ஏகே47 ரக துப்பாக்கிகள் மீட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.