1 min read
இராணுவத்திற்கு 6000 கோடியில் வான் பாதுகாப்பு அமைப்புகள் வாங்க முடிவு !!
இராணுவத்தில் உள்ள வான்பாதுகாப்பு துப்பாக்கி அமைப்புகளை நவீனப்படுத்தும் திட்டம் நீண்ட நாட்களாக நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது.இது போன்ற துப்பாக்கிகள் இதற்கு முன் வெளிநாடுகளிடம் இருந்து தான் பெறப்பட்டு வந்தன.
தற்போது மேக் இன் இந்தியா மற்றும் ஆத்மநிர்பர் பாரத் திட்டத்தின் கீழ் இந்திய நிறுவனங்களிடம் இருந்து இந்த துப்பாக்கிகளை பெற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த துப்பாக்கிகளை இந்திய இராணுவத்திற்கு வழங்க 12 நிறுவனங்களுக்கு மேலாக தயாராக உள்ளன.
தற்போது வான் பாதுகாப்பு துப்பாக்கி மற்றும் அதன் வெடிபொருள்கள் சேர்த்து 6000 கோடிகள் செலவில் பெற பாதுகாப்பு கொள்முதல் அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.
விரைவிலேயே இதற்கான டென்டர் விடப்பட்டு இந்த துப்பாக்கிகள் பெறப்பட உள்ளன.