
தற்போது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தொடர்ச்சியாக பல ஆயிரம் துணை ராணுவப்படை வீரர்கள் குவிந்து வருவதாகவும் இதற்கு பின்னால் ஏதேனும் அரசியல் காரணங்கள் இருக்குமா என சந்தேகம் வலுத்து வருகிறது.
அதே நேரத்தில் கடந்த சில நாட்களாக ஒருங்கிணைந்த காஷ்மீர் ஏற்கனவே இரண்டாக பிரிக்கப்பட்ட நிலையில் மீண்டும் ஜம்மு மற்றும் காஷ்மீர் என பிரிக்கப்பட ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக காஷ்மீரில் தொடர்ச்சியாக துணை ராணுவ படையினர் குவிந்து வருகின்றனர் இவர்களின் போக்குவரத்து மற்றும் நடமாட்டம் பன்மடங்கு அதிகரித்து உள்ளதை உணர முடிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதை பற்றி காஷ்மீர் மாநில காவல்துறை அதிகாரி ஒருவர் பேசுகையில் இது வழக்கமான ஒன்று தான் தேர்தல் பணிக்காக சென்ற வீரர்கள் மீண்டும் தங்களது நிலைகளுக்கு திரும்பி வருவதாகவும்,
4 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேச தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக வெளியே சென்ற 300 கம்பனி வீரர்களில் தற்போது வரை 70 கம்பனி வீரர்கள் திரும்பி உள்ளதாகவும்,
மீதமுள்ள 230 கம்பனி துணை ராணுவப்படை வீரர்களும் படிப்படியாக ஜம்மு காஷ்மீர் நோக்கி தங்களது பாதுகாப்பு பணிகளை தொடருவதற்காக திரும்பி வந்து கொண்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஒரு துணை ராணுவப்படை கம்பனியில் 100 வீரர்கள் இருப்பர் அந்த வகையில் 300 கம்பனிகளில் மொத்தமாக சுமார் 30,000 வீரர்கள் இருப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.