Day: June 27, 2021

நீர்மூழ்கி நீருக்குள்ளேயே 2 வாரம் இருக்க உதவும் தொழில்நுட்பம் வழங்க இரஷ்யா விருப்பம்

June 27, 2021

இரு நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தம் மூலம் நீர்மூழ்கியை நீண்ட நேரத்திற்கு நீருக்குள்ளேயே வைத்திருக்க உதவும் தொழில்நுட்பத்தை இந்தியாவிற்கு வழங்க தயாராக இருப்பதாக இரஷ்யா கூறியுள்ளது. தற்போது இந்தியா P 75I திட்டத்தின் கீழ் ஆறு நீர்மூழ்கிகளை கட்ட உள்ளது.இதற்காக டென்டர் விடப்பட உள்ள நிலையில் இதற்கு இரஷ்யா,ஜெர்மனி,ஸ்பெயின் மற்றும் தென்கொரியா ஆகியவை தனது நீர்மூழ்கிகளை வழங்க தயாராக உள்ளன. ஒரு நீர்மூழ்கி நீருக்குள்ளேயே நீடித்திருக்க உதவும் தொழில்நுட்பம் தான் Air Independent Propulsion (AIP).ஏஐபி தொழில்நுட்பம் இல்லாத […]

Read More

ட்ரோன் மூலம் ஜம்மு விமானத் தளத்தில் தாக்குதல்; புதுமுறையான தாக்குதல்

June 27, 2021

சிறிய ட்ரோன் மூலம் ஜம்மு விமான தளத்தில் கண்ணிவெடிகள் வீசப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன.இது போன்ற தாக்குதல் நடத்தப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.இரு வெடிகளும் வானூர்தி ஹேங்கருக்கு மிக அருகே வெடித்துள்ளன. ஒரு ஐஇடி ஒரு கட்டிடத்தின் மேல் பகுதியில் வெடித்து சேதம் விளைவித்ததாகவும் மற்றொன்று திறந்த இடத்தில் விழுந்து வெடித்துள்ளதாகவும் விமானப்படை கூறியுள்ளது. இது குறித்த விசாரணைக்கு விமானப்படை உத்தரவிட்டுள்ளது.இரண்டாம் குண்டு வெடித்ததில் இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read More

விக்ராந்த் எப்போது படையில் இணைக்கப்படும் ? புதிய தகவல்கள்

June 27, 2021

இந்தியா சொந்தமாகவே வடிவமைத்து கட்டமைத்து வரும் விக்ராந்த் விமானம் தாங்கி கப்பல் அடுத்த வருடம் படையில் இணைக்கப்பட உள்ளது.மேலும் இதன் போர்த்திறன் , வேகம் மற்றும் செயல்படும் திறன் கடற்படைக்கு புதிய தெம்பூட்டும் என பாதுகாப்பு துறை அமைச்சர் கூறியுள்ளார். கொச்சின் தளத்தில் விக்ராந்த் கட்டுமானத்தை பார்வையிட்ட அவர் விக்ராந்த் கப்பலை இந்தியாவின் பெருமை எனவும் இந்தியாவின் ஆத்மநிர்பார் பாரத் திட்டத்தின் சிறந்த எடுத்துக்காட்டு எனவும் புகழ்ந்துள்ளார். இந்திய சுதந்திரமடைந்து அடுத்த வருடம் 75 ஆண்டுகள் நிறைவு […]

Read More

பேச்சுவார்த்தை மூலம் லடாக் பிரச்சனையை முடிக்க இந்தியா சீனா முடிவு

June 27, 2021

கிழக்கு லடாக் உட்பட அனைத்து மோதல் இடங்களிலும் உள்ள பிரச்சனையை பேச்சுவார்த்தை மற்றும் தொலைத் தொடர்ப்பு உதவியுடன் சுமூகமாக முடிக்க இந்தியா மற்றும் சீனா ஒப்புக்கொண்டுள்ளன. பிரச்சனை குறித்து மீண்டும் ஒருமுறை சந்தித்து பேச இரு நாடுகளும் முன்வந்துள்ளன.இந்திய சீனா மோதல் கடந்த வருடம் மே மாதம் தொடங்கி கல்வான் மோதலுக்கு பிறகு பிரச்சனை மிகத் தீவிரமானது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த மோதலை விரைவில் முடிக்க இருநாடுகளும் 12ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு மிக விரைவாக தயாராக உள்ளன.விரைவில் […]

Read More