Day: June 23, 2021

பயிற்சி இல்லாத சீன வீரர்கள்- இந்திய தளபதி ராவத் கருத்து

June 23, 2021

லடாக் போன்ற உயர்மலைப்பகுதிகளில் செயல்பட சீன வீரர்களுக்கு தகுந்த பயிற்சி இல்லை என இந்தியாவின் ஒருங்கிணைந்த படைத் தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார்.தற்போது சீனப்படை திபத்தியர்களை படையில் இணைத்து இந்திய எல்லையில் களமிறக்க திட்டமிட்டுள்ளது. கல்வான் மோதலுக்கு பிறகு இந்திய எல்லையில் செயல்பட சீன வீரர்களுக்கு போதுமான திறன் இல்லை என்பதை சீனா உணர்ந்துள்ளது.மக்கள் அதிகமுள்ள பகுதிகளில் இருந்து தான் சீனவீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.மேலும் அவர்கள் குறைந்த காலத்தில் தான் இராணுவத்தில் உள்ளனர்.லடாக் போன்ற கடுமையான மலைப்பாங்கான பகுதிகளில் […]

Read More

அணுசக்தி விமானம்தாங்கி கப்பலுடன் இந்திய படைகள் மாபெரும் போர்பயிற்சி

June 23, 2021

ஜீன் 23 மற்றும் 24 தேதிகளில் அமெரிக்காவின் அணுசக்தி விமானந்தாங்கி கப்பலுடன் இந்திய கடற்படை மற்றும் இந்திய விமானப்படை இணைந்து போர்பயிற்சிகள் மேற்கொள்ள உள்ளது.இந்திய கடற்படையின் ஐஎன்என் கொச்சி மற்றும் ஐஎன்எஸ் தெக் போர்க்கப்பல்களுடன் மிக்-29கே மற்றும் P8I விமானங்கள் இந்த பயிற்சியில் கலந்து கொள்ள உள்ளன. அமெரிக்காவின் நிமிட்ஸ் ரக விமானம் தாங்கி கப்பலான யுஎஸ்எஸ் ரோனால்ட் ரீகன் உடன் ஆர்லே புர்க் ரக டெஸ்ட்ராயர் USS Halsey மற்றும் டைகோன்டெரோக ரக வழிகாட்டு ஏவுகணை […]

Read More

ஆப்கனில் தாலிபன்களுடன் பிடிப்பட்ட பாக் இராணுவ அதிகாரி

June 23, 2021

ஆப்கனின் தேசிய பாதுகாப்பு படை எனும் உளவுப் பிரிவால் பாக் இராணுவத்தில் பணிபுரியும் இராணுவ அதிகாரி அசிம் அக்தர் என்பவன் தாலிபன்களுடன் பிடிபட்டுள்ளான். ஆப்கனின் பக்திகா மகாணத்தில் பாக் அதிகாரியை ஆப்கன் உளவு படைவீரர்கள் கைது செய்துள்ளார்கள்.தாலிபன்களுடன் இணைந்து சண்டையிட பாக் இராணுவம் அவரை அனுப்பியுள்ளதாக நடந்த விசாரணையில் அவர் கூறியுள்ளார். இந்தியாவிற்குள் பயங்கரவாதிகளை அனுப்புவதிலும் இவன் ஈடுபட்டதாக ஆப்கன் பாதுகாப்பு அதிகாரிகளிடம் கூறியுள்ளான். வெளியான தகவல்படி இவனுடன் இன்னும் நிறைய பாக் இராணுடத்தினர் தாலிபன்களுடன் இணைந்து […]

Read More

ஆயுத தொழிற்சாலை வாரிய சீர்திருத்தம் ஆர்.எஸ்.எஸ், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்கள் கூட்டாக போராட்டம் !!

June 23, 2021

சமீபத்தில் மத்திய அரசு ஆயுத தொழிற்சாலைகள் வாரியத்தை சீரமைத்து கார்ப்பரேட் ஸ்டைலில் மாற்றியமைக்க அனுமதி அளித்தது. இதனையடுத்து தற்போது ஆர்.எஸ்.எஸ், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் ஆகிய தொழிற்சங்க அமைப்புகள் கூட்டாக போராட்டம் நடத்த போவதாக அறிவித்து உள்ளனர். இதுபற்றி அந்த அமைப்புகள் கூட்டாக வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் ஜூலை 1 போராட்ட அறிவிப்பு வெளியாகும் எனவும் ஜூலை 19 முதல் போராட்டம் நடைபெறும எனவும் கூறப்பட்டுள்ளது. இதில் பங்கு பெறும் தொழிற்சங்கங்களாவன கம்யூனிஸ்ட் கட்சிகளின் அகில இந்திய பாதுகாப்பு […]

Read More

MH-60 ரோமியோ ஹெலிகாப்டர் பயிற்சிக்காக அமெரிக்கா சென்ற இந்திய குழு !!

June 23, 2021

இந்திய கடற்படையை சேர்ந்த 18 பேர் கொண்ட குழு ஒன்று விரைவில் படையில் இணைக்கப்பட உள்ள MH-60 Romeo ரோமியோ ஹெலிகாப்டர்களில் பயிற்சி பெற அமெரிக்கா சென்றுள்ளது. அடுத்த மாதம் முதல் மூன்று ரோமியோ ஹெலிகாப்டர்கள் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டு அமெரிக்காவில் பயிற்சிகளுக்காக பயன்படுத்தப்படும் பின்னர் 2022ஆம் ஆண்டு அவை இந்தியா வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமெரிக்க கடற்படை இந்திய குழு பென்சிகோலா கடற்படை விமான தளத்தை வந்தடைந்துள்ளதாக கூறியுள்ளது. கடந்த […]

Read More

சிரியாவில் அமெரிக்க வீரர்களை வழிமறித்த ரஷ்ய வீரர்கள் !!

June 23, 2021

சில நாட்கள் முன்னர் வடகிழக்கு சிரியாவில் அமெரிக்க ராணுவ கான்வாய் ஒன்றை ரஷ்ய வீரர்கள் வழிமறித்து நிறுத்தியுள்ள நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிரியாவின் ஹசாகேஹ் மாகாணத்தில் உள்ள தால் தமர் நகருக்கு 10 கிலோமீட்டர் மேற்கே M4 சாலையில் நான்கு அமெரிக்க ராணுவ வாகனங்கள் ரஷ்ய படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன. இதுபற்றி அறிக்கை வெளியிட்டுள்ள ரஷ்ய அமலில் இருக்கும் ஒப்பந்தத்தின் படி அமெரிக்கா முன்னரே தகவல் தந்திருக்க வேண்டும் ஆனால் அதை செய்யவில்லை […]

Read More

ஜம்முவில் இருந்து முதல் பெண் போர் விமானி தேர்வு !!

June 23, 2021

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஜம்மு பிராந்தியத்தில் இருந்து முதல் முறையாக ஒரு பெண் போர் விமானி இந்திய விமானப்படையில் பயிற்சி முடித்து அதிகாரியாக இணைந்துள்ளார். ஃப்ளையிங் ஆஃபீஸர் மாவ்யா சுதன் ஜம்முவில் உள்ள ரஜோவ்ரி மாவட்டம் லம்பேரி கிராமத்தை சேர்ந்தவர் ஆவார் இவர் தான் அந்த சாதனைக்கு உரியவர். ஃப்ளையிங் ஆஃபீஸர் மாவ்யா சுதன் இந்திய விமானப்படையில் இணையும் 12 ஆவது பெண் போர் விமானி என்பதும் குறிப்பிடத்தக்கது ஆகும்.

Read More