Day: June 22, 2021

5 ராணுவ அதிகாரிகள் மீது கோர்ட் மார்ஷியல் நடவடிக்கை !!

June 22, 2021

ஒரு ப்ரிகேடியர், ஒரு கர்னல், 1 லெஃப்டினன்ட் கர்னல், 1 கேப்டன் மற்றும் 1 JCO ஆகிய ஐந்து அதிகாரிகள் மீது கோர்ட் மார்ஷியல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி இவர்கள் ஐவரும் போலி ஆவணங்கள் தயாரித்து 6லட்ச ரூபாய் பண பரிவர்த்தனை மோசடி மூலமாக சுருட்டியதாக குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. ப்ரிகேடியர் குப்தா, கர்னல் சுபாஷ் சந்திரா, லெஃப்டினன்ட் கர்னல் சுதீர் குமார் சிங், கேப்டன் ககன் பாவா, வாரன்ட் ஆஃபீஸர் […]

Read More

இந்தியாவின் மிக சக்திவாய்ந்த ட்ரோன் ரஸ்டம்-2; HALக்கு வாய்ப்பு வழங்கப்படுமா ??

June 22, 2021

இந்தியாவின் நீண்ட நாள் கனவு திட்டங்களில் ஒன்று அமெரிக்காவை போல மிகவும் சக்திவாய்ந்த அதிநவீன ட்ரோன்களை சொந்தமாக தயாரிக்க வேண்டும் என்பதாகும். அந்த வகையில் ரஸ்டம்-2 அல்லது தபாஸ் – BH201 எனும் அதிநவீன “ஆளில்லா ஆயுதம் தாங்கிய தொலைதூர ட்ரோன்” (UCAV) தயாரிப்பதாகும். இந்த ட்ரோனுடைய தயாரிப்பு உரிமையை பெற மூன்று தனியார் மற்றும் நான்கு பொதுத்துறை நிறுவனங்கள் போட்டி போடுகின்றன, அவையாவன டாடா பவர், லார்சன் & டுப்ரோ, கோத்ரேஜ் ஏரோஸ்பேஸ், பெல், HAL […]

Read More

காஷ்மீரில் பயங்கரம்; வீரரை சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகள்

June 22, 2021

காஷ்மீரில் காவல்துறை வீரர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். காஷ்மீர் காவல்துறையே சேர்ந்த வீரர் ஆய்வாளர் பெர்வைஸ் அகமது தார் அவர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அவர் வீரமரணம் அடைந்துள்ளார். நௌகமின் கனிபோரா பகுதியில் தொழுகை முடித்து 8.30 மணி அளவில் வீடு திரும்பியவரை குறிவைத்து பயங்கரவாதிகள் இந்த கொடும் தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பயங்கரவாத குழுவான லஷ்கரின் சகீன் அனஸ் பிரிவு பொறுப்பேற்றுள்ளது.தப்பியோடிய பயங்கரவாதிகளை பிடிக்க தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளது.

Read More

சீன இராணுவத்தில் திபத்திய படைப் பிரிவா ? இந்திய எல்லையில் களமிறக்கம்

June 22, 2021

இந்தியாவுடனான எல்லை மோதலுக்கு பிறகு இந்திய இராணுவத்தில் தற்போது உள்ள லடாக்கி மற்றும் திபத்திய வீரர்களுக்கு முன்னால் சீன வீரர்கள் சிறப்பாக செயல்பட முடியவில்லை என்பதை சீனா நன்கு உணர்ந்துவிட்டது. சீனாவின் தொலைதூர பிரிவில் இருந்து சீன இராணுவத்தில் இணைந்த வீரர்களால் லடாக் போன்ற உயரமான இடங்களில் தாக்குபிடிக்க முடியவில்லை.மே 2020 முதல் இந்த மோதல் தொடர்ந்தே வருகிறது.செப்டம்பர் முதல் வாரத்தில் இந்திய இராணுவம் கைலாஷ் மலைப்பகுதிகளில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிய போது சீனா தனது திட்டத்தை […]

Read More

இலகுரக விமானம் குறித்த புதிய தகவல்கள்; எப்போது படையில் இணையும் ?

June 22, 2021

தற்போது இராணுவத்தில் இலகுரக விமானங்களின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இராணுவத்தில் தற்போது பழயை சீட்டா மற்றும் செடக் ரக வானூர்திகள் தான் உள்ளன.தற்போது கிடைத்துள்ள தகவல்படி இந்தியா மேம்படுத்தியுள்ள புதிய இலகுரக வானூர்தி 2022ம் ஆண்டின் இறுதியில் இந்திய இராணுவத்திற்கு கிடைக்க உள்ளது.முதல் தொகுதியாக ஆறு வானூர்திகள் வழங்கப்பட உள்ளன. இந்த புதிய LUH வானூர்தி தற்போது செயல்பாட்டில் உள்ள பழைய சீட்டா மற்றும் செடக் வானூர்திகளுக்கு மாற்றாக இராணுவத்தில் இணைய உள்ளது. இந்த LUH-ன் எடை மூன்று டன்கள் […]

Read More

மூன்றே வருடங்களில் மிக்-21 படையில் இருந்து நீக்கம்- தளபதி பதாரியா

June 22, 2021

மிக்-21 பல ஆண்டுகாலமாக இந்திய விமானப்படையில் செயல்பட்டு வருகிறது.பல விமானங்கள் நவீனப்படுத்தப்பட்டு விமானப்படையில் செயல்பாட்டில் உள்ளது.இந்த மிக்-21 விமானங்களை படையில் இருந்து படிப்படியாக குறைத்து புதிய விமானங்கள் படையில் இணைக்க பல்வேறு முயற்சி எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது நடந்து முடிந்த ஒருங்கிணைந்த பட்டமளிப்பு விழாவில் பேசிய விமானப்படை தளபதி மிக்-21 விமானங்களை உடனடியாக படையில் இருந்து விடுவிக்க முடியாது.அடுத்த 2-3 வருடங்களில் அதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது 36 ரபேல் விமானங்களை படையில் […]

Read More

புதிய நேத்ரா விமானங்களை வாங்க திட்டமிடும் இந்திய விமானப்படை

June 22, 2021

விமானப்படையின் ஒருங்கிணைந்த பட்டமளிப்பு விழாவிற்கு பின்பு பேசிய விமானப்படை தளபதி ஏர்சீப் மார்சல் பதாரியா அவர்கள் ERJ145 விமானத்தை அடிப்படையாக கொண்டு டிஆர்டிஓ மேம்படுத்திய அவாக்ஸ் ரேடார் கொண்ட நேத்ரா விமானங்கள் பெறப்பட உள்ளதாக தகவல்கள் வெளியிட்டுள்ளார். பாக் மற்றும் சீனா என இருமுனை அச்சுறுத்தல் இருப்பதால் அவாக்ஸ் விமானங்களின் தேவை அதிகமாக உள்ளது.டிஆர்டிஓ மேம்படுத்தியுள்ள ஏஇஎஸ்ஏ ரேடார் கொண்டு ஏர் இந்தியா வசம் உள்ள ஆறு ஏர்பஸ் ஏ320 விமானங்களை அவாக்ஸ் விமானங்களாக மாற்றும் திட்டமும் […]

Read More

சீனாவுக்கு எதிராக ஹசிமாரா தளத்தில் ரபேல் விமானங்களை களமிறக்க உள்ள விமானப்படை

June 22, 2021

இந்திய விமானப்படை இரண்டாவது ரபேல் ஸ்குவாட்ரானை தற்போது ஏற்படுத்தியுள்ளது. 101 ‘Falcons of Chhamb and Akhnoor’ எனும் பெயரில் அம்பாலாவில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.இது விரைவில் கிழக்கு முனைக்கு மாற்றப்பட உள்ளது.அதாவது மேற்கு வங்கத்தில் உள்ள ஹசிமாரா விமானப்படை தளத்திற்கு மாற்றப்பட உள்ளது. முழு பலத்துடன் அதாவது 18 ரபேல் விமானத்துடன் முதல் ஸ்குவாட்ரான் ஆன 17 கோல்டன் ஏரோஸ் ஏற்கனவே அம்பாலா தளத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.தற்போது ஐந்து விமானங்களுடன் இரண்டாவது ஸ்குவாட்ரான் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 13 விமானங்களும் அடுத்த […]

Read More