இந்திய கடற்படை தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் லண்டனில் உள்ள இந்திய தூதரகம் ஏற்பாடு செய்த ஆன்லைன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது 1971 வங்கதேச விடுதலை போரானது இந்திய துணைகண்டத்தின் புவியியல், அரசியல் மற்றும் வரலாற்றை அடியோடு மாற்றிய மாபெரும் நிகழ்வு என கூறினார்.
மேலும் இந்த போர் மூலமாக இந்திய ராணுவம் குறிப்பாக இந்திய கடற்படை வரலாற்றில் தனது சக்தியை நிலைநாட்டியது குறிப்பிடத்தக்கது.
இந்த போரில் தான் இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் மிகப்பெரிய அளவில் எதிரி நாட்டு வீரர்கள் சரணடைந்தனர் என சுமார் 93000 பாக் வீரர்கள் சரணடைந்த நிகழ்வை சுட்டி காட்டினார்.