
இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படை ஆகியவற்றின் விமான தளங்களில் பயன்படுத்தி கொள்ள 11 புதிய ரேடார்கள் வாங்க ஒப்பந்தம் கையெழுத்து ஆகியுள்ளது.
மஹிந்திரா டெலிஃபோனிக்ஸ் நிறுவனத்துடன் 11 விமானதள கண்காணிப்பு ரேடார்கள் மற்றும் மோனோபல்ஸ் ரேடார்களை 323 கோடி ருபாய் செலவில் வாங்க ஒப்பந்தம் கையெழுத்து ஆகியுள்ளது.
இந்த ஒப்பந்தம் மூலமாக இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படையின் வான் சாரந்த நடவடிக்கைகள் மேலும் வலுப்பெறுவதோடு உள்நாட்டு தொழில்நுட்பம் முக்கியத்துவம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.