10,000 போடோ இளைஞர்கள் முப்படைகள் மற்றும் துணை ராணுவ படைகளில் இணைய வழிவகை

  • Tamil Defense
  • June 29, 2021
  • Comments Off on 10,000 போடோ இளைஞர்கள் முப்படைகள் மற்றும் துணை ராணுவ படைகளில் இணைய வழிவகை

10,000 போடோ இளைஞர்கள் முப்படைகள் மற்றும் துணை ராணுவ படைகளில் இணைய வழிவகை செய்ய வேண்டும் !!

போடோலாந்து பிராந்திய கவுன்சிலின் தலைவர் திரு. பிரமோத் போரோ மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் அளித்துள்ள மனுவில் போடோ இளைஞர்கள் படைகளில் இணைவதை ஊக்குவிக்கும் வகையில்

தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் 10,000 போடோ இளைஞர்கள் நாட்டின் முப்படைகள் மற்றும் துணை ராணுவ படைகளில் இணையும் வகையில்

போடோலாந்து பிராந்திய கவுன்சில் பயிற்சி மையங்களை அமைத்து பயிற்சி அளிக்க உதவ வேண்டும் எனவும் இந்த கருத்தை ஏற்கனவே அசாம் காவல்துறையிடம் எழுப்பி உள்ளதாகவும்

பாராளுமன்றத்தில் சிறப்பு சட்டம் மூலமாக போடோலாந்து பிராந்திய கவுன்சிலுக்கு மேலும் சில அதிகாரங்களை வழங்க வழிவகை செய்யுமாறு உள்துறை அமைச்சரை அவர் கேட்டு கொண்டுள்ளார்.